இந்தியில் கேள்வித் தாள்.. தமிழில் கிடையாதா? சு.வெங்கடேசனுக்கு வந்ததே கோபம்! டெல்லிக்கு பறந்த கடிதம்!
மதுரை : பணி நியமனத் தேர்வுக் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் காலியாக உள்ள சுமார் 2000 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது. இதற்காக மத்திய அரசு தேர்வாணையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பாணையை வெளியிட்டது.
அதில் கல்வித் தகுதி, விண்ணப்ப விதிமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று இருந்தது. அதாவது தேர்வுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன்
இந்நிலையில் பணி நியமனத் தேர்வுக் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசு
அதில், ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20000 காலியிடங்களுக்கு "ஸ்டாப் செலக்சன் கமிசன்" பணி நியமன அறிவிக்கையை 17.09.2022 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகப் பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளுக்கான தேர்வு ஆகும். ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

இந்தியில் மட்டும் தேர்வு
பணி நியமனத் தேர்வுக் கேள்வித் தாள் இரண்டு மொழிகளில் மட்டுமே - இந்தி, ஆங்கிலம் - இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்கு இடம் இல்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. இந்தியல்லா மாநிலங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது ஆகும். மேலும் இப்படி பணி நியமனம் பெறப் போகிற ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப் போகிறார்கள்?

கடும் கண்டனம்
ஏற்கெனவே உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிகக் குறைவாக உள்ளதென்ற பிரச்சினைகள் பல துறைகளின்/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டாப் செலக்சன் கமிசன் பணி நியமனங்களும், மொழிச் சமத்துவம் கடைப்பிடிக்கப்படாததால் அத்தகைய பாரபட்சத்தை உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது. எனவே உடனடியாக தாங்கள் தலையிட்டு ஸ்டாப் செலக்சன் கமிசன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்." என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications