மதுரை சக்கிமங்கலம் டூ டோக்கியோ...ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் ரேவதிக்கு குவியும் பாராட்டு
ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி தேர்வாகியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மதுரை: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி. சக்கிமங்கலத்தில் இருந்து டோக்கியோவிற்கு சென்று தடகளப்போட்டியில் பங்கேற்கப்போகும் ரேவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழக அமைச்சர்கள் முதல் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் தனது முகநூல் பக்கத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் இளம் வயதில் பெற்றவர்களைப் பறிகொடுத்த பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார் ரேவதி. மதுரை சக்கிமங்கலத்தில் பிறந்த இவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். இதற்காக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார்.

ரேவதியின் விடா முயற்சிக்கும் பயிற்சிக்கும் விஸ்வரூப வெற்றி கிடைத்துள்ளது. தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ரேவதியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். டோக்கியோ செல்வதற்காக அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார்.
https://www.facebook.com/DrTamilisaiGuv/posts/5693630324042666
தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜன் தனது முகநூல் பக்கத்தில், ரேவதியை பாராட்டி பதிவிட்டுள்ளார். தமிழகம்,மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்காக கலந்துகொள்ள உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்கும்,இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
தனது வெற்றிப்பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் ரேவதி. எனக்கு மதுரை சக்கிமங்கலம், சொந்த ஊர். நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். 5ஆம் வகுப்பு படிக்கும்போது தாயை பறி கொடுத்தேன். நானும், தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்தோம்.
நான் 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு விடுதி மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்கி படித்தேன். 12ஆம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது நான் காலில் ஷூ இல்லாமல் ஓடுவதை பார்த்து பயிற்சியாளர் கண்ணன் எனக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வாங்கி கொடுத்தார். நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சக்கிமங்கலத்தில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன்.
அப்போது பயிற்சியாளர் கண்ணன் என்னை சந்தித்து, உனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன். படிப்பு கட்டணம், தங்குமிடத்துக்காக நீ பணம் எதுவும் கட்ட தேவையில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நான் அந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு சேர்ந்தேன். அப்போது எனக்கு இளைப்பு நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் மிகவும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டேன். கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை கைவிட வேண்டி இருந்தது.
நான் மீண்டும் சக்கிமங்கலம் வீட்டுக்கு வந்து, பைக் மெக்கானிக் கடையில் மறுபடியும் வேலை பார்க்க தொடங்கினேன். அப்போது கண்ணன் என்னை மீண்டும் சந்தித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க உதவினார்.
நான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். எனக்கு தென்னக ரயில்வேயில் வேலை கிடைத்தது. இதன் மூலம் பாட்டி மற்றும் தங்கையை பராமரித்து வருகிறேன்.
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என் கனவாக உள்ளது. இதற்காக பாட்டியாலா முகாமில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். ஜப்பான் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே என் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார் ரேவதி.
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சார்பாக ரேவதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications