கிழக்கே போகும் ரயில்..மதுரை-தேனி ரயில் பயண நேரத்தில் சின்னதாக மாற்றம்..கவனிச்சீங்களா

மதுரை - தேனி ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அட்டவணைப்படி இந்த சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை - தேனி ரயில் கால அட்டவணை இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இருப்பினும் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது.

மதுரை - தேனி ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அண்மையில் துவங்கப்பட்டது. கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு, மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928ம் ஆண்டு போடி - மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இந்த ரயில் மதுரையில் இருந்து தேனி செல்கையில் மேற்கேயும், தேனியில் இருந்து மதுரை வருகையில் கிழக்கேயும் பயணிக்கும். இந்த ரயிலை வைத்து தான் ‛கிழக்கே போகும் ரயில்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார் இயக்குநர் பாரதிராஜா. காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954ம் ஆண்டு குறுகிய பாதை - மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரை - போடி அகல ரயில் பாதை

மதுரை - போடி அகல ரயில் பாதை

மதுரை - போடி இடையே 98 கி.மீ. தூரத்திற்கு அகல பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் சுணக்கம் ஏற்பட்டது. முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே 75 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. தேனி - போடி இடையேயான பணிகள் நடைபெற்று வருகின்றன.

12 ஆண்டுகளுக்கப் பின் கிளம்பிய பயணம்

12 ஆண்டுகளுக்கப் பின் கிளம்பிய பயணம்

11 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் நிறைவுற்று 2022 மே 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார். இந்த ரயில் மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ் பயண நேரத்தை விட குறைவாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்தது. பயணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு உற்சாகமாக பயணத்தை தொடங்கினர்.

எத்தனை மணிக்கு கிளம்பும்

எத்தனை மணிக்கு கிளம்பும்

தென்னக ரயில்வே அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு 12 பெட்டிகளுடன் கிளம்பிய பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, நிறுத்தங்களில் நின்று காலை 09.35 மணிக்கு தேனியை வந்தடைந்தது. அதே போல் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி நிறுத்தங்களில் நின்று மாலை 07.35 மணிக்கு மதுரை சென்றடைந்தது.

புறப்படும் நேரம் மாற்றம்

புறப்படும் நேரம் மாற்றம்

இந்நிலையில் மதுரை - தேனி ரயில் கால அட்டவணை நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அட்டவணைப்படி இந்த சிறப்பு ரயில் வண்டி எண்.06701 மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும்.

மதுரைக்கு வரும் ரயில்

மதுரைக்கு வரும் ரயில்

மறுமார்க்கத்தில் தேனியில் இருந்து புறப்படும் ரயில் வண்டி எண்.06702 தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக மதுரை ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இருப்பினும் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது. கிழக்கே போகும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+