மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா இல்லாத கைலாசா.. ஜல்லிக்கட்டை நடத்த இதுதான் சரியான இடம்.. நித்திக்கு மதுரையிலிருந்து கடிதம்!

Google Oneindia Tamil News

மதுரை: கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    நித்தியானந்தா கைலாசாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் - மதுரை விளையாட்டுக் கழகம்

    கொரோனாவுக்கு மத்தியில் தற்போது ஊரெங்கும் பேச்சாக உள்ளது. கைலாசாவுக்கு தனிக் கொடி, தனி பாஸ்போர்ட், கைலாசாவில் குடியேற விண்ணப்பம் என கண்ணுக்கு தெரியாத கைலாசா அத்தனை பிரபலமாகி வருகிறது.

    கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை அவர் வெளியிட்டார்.

    இனி எண்ட நாடு கைலாசா.. எண்ட அதிபர் நித்தியானந்தா.. ஓவர் சந்தோசத்தில் நெட்டிசன்கள்.. தெறி மீம்ஸ்கள்!இனி எண்ட நாடு கைலாசா.. எண்ட அதிபர் நித்தியானந்தா.. ஓவர் சந்தோசத்தில் நெட்டிசன்கள்.. தெறி மீம்ஸ்கள்!

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    இதனால் கைலாசா குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. மேலும் 56 இந்து நாடுகளுடன் மட்டுமே தான் வர்த்தகம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார்.

    கொரோனா தோசை

    கொரோனா தோசை

    மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை ஆகியவற்றை செய்துக் கொடுத்து தமிழக மக்களை கவருவது போல் கைலாசா நாட்டு மக்களை கவருவேன் என கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நித்தியானந்தாவும் பச்சைக் கொடி காட்டும் விதத்தில் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    அதற்கும் நித்தியானந்தா ஓகே என சொன்ன நிலையில் காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்களுக்கு கைலாசாவில் தொழில் தொடங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டும் என வீர மரபு வீர விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா இல்லாத நாடு

    கொரோனா இல்லாத நாடு

    உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள், வீர விளையாட்டுக்களை நடத்துவது சவாலாக உள்ளது. கொரோனா நோய் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    Madurai youth writes letter to Nithayananda seeking permission to conduct Jallikattu competition in Kailasa as the whole world is infecting with corona except the Kailasa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X