மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எலித் தொல்லை தாங்க முடியலை.. மெஷினை கடிச்சு வச்சுரப் போகுது.. பதறும் மதுரா வேட்பாளர்!

Google Oneindia Tamil News

மதுரா: "வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து உள்ளது; அறையை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்," என்று மதுரா தொகுதி வேட்பாளர் நரேந்திர சிங் கோரியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்றத் தொகுதிக்கு கடந்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளர் நடிகை ஹேமா மாலினி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்ட்ரீய லோக் தளத்தின் சார்பில் நரேந்திர சிங் போட்டியிடுகிறார்.

mathura rld candidate raises question on safety of evms

இந்த நிலையில், மதுரா தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள உள்ள மண்டி சமிதி பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மைய கட்டடத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

12ம் தேதி மறு வாக்குப் பதிவு.. நோ சரக்கு.. பாட்டில் வாங்கி ஸ்டாக் வைக்கும் புதுச்சேரி 12ம் தேதி மறு வாக்குப் பதிவு.. நோ சரக்கு.. பாட்டில் வாங்கி ஸ்டாக் வைக்கும் புதுச்சேரி "குடிமக்கள்"!

இந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது." வாக்குப்பதிவு எந்திரங்களை எலிகள் சேதப்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது என்று நரேந்திர சிங் கவலை தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக, மூன்று நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த புகாரைடுத்து தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சர்வக்ய ராம் மிஸ்ரா வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள அறையை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். நேற்று மூன்றாவது நாளாக பார்வையிட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் எந்த ஆபத்தும் இல்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கட்டிட வளாகத்தில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது," என்று ராம் மிஸ்ரா கூறினார்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மதுரா தொகுதி வேட்பாளரின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
RLD candidate from Mathura, Narendra Singh has raised questions over the safety and security of electronic voting machines (EVMs). "Since the EVMs kept in the Mandi Samiti may be damaged by rats, we want an assurance about the safety of the machines," the Rashtriya Lok Dal (RLD) candidate told PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X