"பூச்சாண்டி" காட்டாதீர்கள்..அரசியலை விட்டு விலக ஓபிஎஸ் தயாரா? - ஆர்.பி. உதயகுமார் சவால்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக தெரிந்தால் அரசியலை விட்டு விலக நான் தயார் ஓபிஎஸ் தயாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக தெரிந்தால் அரசியலை விட்டு விலக நான் தயார் ஓபிஎஸ் தயாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் தன்னுடைய வீட்டிலும் ஓபிஎஸ் விட்டிலும் சோதனை நடத்தட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக தெரிந்தால் அரசியலை விட்டு விலக நான் தயார் ஓபிஎஸ் தயாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு இடையேயான மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதும், துரோகி, எட்டப்பன் என குற்றம் சாட்டுவதும் அதிகரித்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவர்களின் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள், அவரது மகன்களை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

பதிலுக்கு பதில்
எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இருவரும் மாறி மாறி கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஆர்.பி. உதயகுமார் ஓபிஎஸ் பற்றி தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 2008ல் தான் ஆர்.பி.உதயகுமார் அதிமுகவில் இணைந்தார்.

ரூ. 5ஆயிரம் கோடி சொத்து
ஓ.பன்னீர் செல்வத்தால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் ஆர்.பி.உதயகுமார். ஆனால் இன்று ரூ.5 ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று கூறினார். விரைவில் அவரது சொத்து மதிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என்றும் கூறி பரபரப்பை பற்ற வைத்தார்.

ஆர்.பி. உதயகுமார் பதிலடி
இந்த புகாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆர்.பி.உதயகுமார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவின் வரலாறு தெரியாத செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஒ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக துவங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக உழைத்த குடும்பம் தங்களது குடும்பம் என்ற வரலாறு கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றவர்களுக்கு தெரியாது.

பூச்சாண்டி காட்ட வேண்டாம்
ஓபிஎஸ் உதயகுமாரை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்த வேண்டாம் சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம், திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் தயாராக உள்ளேன். ஓபிஎஸ் வீட்டிலும் தனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் தான் பொது வாழ்க்கையிலிருந்து விலகி விடுகிறேன். நீங்கள் சொத்து குவித்ததாக அறிந்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடத்தில் ஆகாது

அரசியலை விட்டு விலக தயாரா?
ஓபிஎஸ் அவர்களே இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார். கடந்த மாதம் வரை அதிமுகவில் ஒற்றுமையாக இருந்தவர்கள்.. அண்ணன் தம்பி என பாச மழை பொழிந்தவர்கள் இன்று ஒற்றைத்தலைமை விவகாரத்தால் பகையாளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வசைமாறி பொழிந்து கொண்டுள்ளது தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications