ஓபிஎஸ் டீமா? முடியாது! பிரதமரை வரவேற்க அனுமதி மறுப்பு! குஷியான இபிஎஸ் கோஷ்டி! யார் யார் தெரியுமா?
மதுரை : மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க இபிஎஸ் தரப்பில் 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பில் அவரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் சின்னாளபட்டி பகுதியில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து மதுரை வரும் பிரதமர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மதுரையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வர இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
இதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஹெலிபேட் அமைக்கப்பட்டது. பிரதமர் வருகைக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தற்போதைய ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து மீண்டும் சோதனை நடைபெற்றது. பிரதமர் வருகையையொட்டி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஐஜி, டிஐஜி, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் மாஸ்
பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பிரதமர் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து சாலை மார்க்கத்தில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க பிரதமரை வரவேற்க தயாராகி வருகின்றனர். கடும் மழையிலும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் மதுரைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எடப்பாடி நிச்சயம் பிரதமரை சந்திப்பார் என தம்பிதுரை கூறியிருந்த நிலையில் இருவரையும் பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அவரை வரவேற்பதற்காக 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அதிருப்தி
அதே நேரத்தில் ஓ,பன்னீர்செல்வத்தை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மாநிலங்களவை உறுப்பினரான தருமர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்டோர் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு நிலையில் ஓபிஎஸ்சை தவிர மற்ற யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் அவர்களை வெளியேறுமாறு பாதுகாப்பு படையினர் கூறியதாக கூறப்படுகிறது, இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications