தேவர் சிலை தங்க கவசம் பெறப்போவது அவர் தானா? ஓபிஎஸ்க்கு சசிகலா சொன்ன சேதி! அதிமுகவில் பரபர!
மதுரை : தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் ஜெயலலிதா வழங்கிய தங்கக் கவசத்தை அணிவிப்பது தொடர்பாக, அதிமுகவினருக்கு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார் சசிகலா.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று, அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படுவது வழக்கம். மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் லாக்கரில் இருந்து தங்கக் கவசத்தை பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் எடுத்து பசும்பொன்னில் விழா கமிட்டியாரிடம் கொடுத்து அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஈபிஎஸ் தரப்பில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கக் கவசத்தை தன்னிடம் வழங்கக்கோரி வங்கியில் மனு அளித்துள்ளார். அதேபோல ஓபிஎஸ் தரப்பினரும் மனு அளித்துள்ளனர். இதனால், தேவர் குருபூஜை அன்று தங்கக் கவசத்தை யார் பெறுவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் போட்டி
அதிமுக தங்கள் வசமே இருப்பதாக உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி தங்க கவசத்தை பெற்று தேவர் சிலைக்கு சிறப்பு செய்து முக்குலத்தோர் சமூக மக்களிடம் நற்பெயரை வாங்க எடப்பாடி பழனிசாமி தரப்பு மும்முரமாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ, இந்த முறையும் தாங்களே தங்கக் கவசத்தை கொண்டு வந்து அணிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இரு தரப்பும் தங்கக் கவசம் கோரி உள்ளதால், இருவரில் யாரிடம் கவசத்தை ஒப்படைப்பது என்பதில் வங்கி அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நடந்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.

சசிகலா பரபர அறிக்கை
இந்நிலையில் இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம்பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

2010 அக்டோபரில்
அவ்வாறு நடைபெறுகின்ற தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, தேவர் திருமகனாருக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக, ஜெயலலிதாவும், நானும் கடந்த 30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருந்தோம். அச்சமயம் எங்களிடம் தேவர் திருமகனாரின் திருவுருவச்சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அங்கே குழுமியிருந்த மக்களும், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் வேண்டுகோள் வைத்தனர்.

தேவர் தங்கக் கவசம்
அதனைத்தொடர்ந்து தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கழகத்தின் சார்பாக செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 09.02.2014-ஆம் தேதி வழங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை சிறப்புடன் கொண்டாடுகிற வகையில் அய்யா முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது.

எந்த இடையூறும் நேரக்கூடாது
தேவர் திருமகனாருக்கு வழங்கிய தங்கக்கவசத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்து தேவர் ஜெயந்தி விழாவின் போது எடுத்து அணிவிக்கப்படுகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை தான், இது ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது. இதில் என்றைக்கும், எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நம் கட்சியினருக்கு தான் இருக்கிறது.

கெட்டு போனதாக சரித்திரம் இல்லை
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை" என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் வைத்து, தொடர்ந்து மேற்கொண்டுவரும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, சமூக நீதிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த தேவர் திருமகனாருக்கு தங்கக்கவசம் அணிவித்து, எதிர்வரும் தேவர் ஜெயந்தி விழாவினை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

எந்த இடையூறும் நேரக்கூடாது
தேவர் திருமகனாருக்கு வழங்கிய தங்கக்கவசத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்து தேவர் ஜெயந்தி விழாவின் போது எடுத்து அணிவிக்கப்படுகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை தான், இது ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது. இதில் என்றைக்கும், எந்தவித இடையூறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நம் கட்சியினருக்கு தான் இருக்கிறது.

கெட்டு போனதாக சரித்திரம் இல்லை
"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை" என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் வைத்து, தொடர்ந்து மேற்கொண்டுவரும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, சமூக நீதிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த தேவர் திருமகனாருக்கு தங்கக்கவசம் அணிவித்து, எதிர்வரும் தேவர் ஜெயந்தி விழாவினை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு சேதி
தேவர் தங்க கவசத்தைப் பெற்று ஒப்படைப்பதில் இருதரப்புக்கும் இடையே போட்டி நேர்ந்துள்ள நிலையில், தங்க கவசம் யாருக்குமே வழங்கப்படாமல் போய்விட வாய்ப்பிருப்பதால், மேற்கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு சேதி சொல்லும் வகையிலேயே "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டு போனதாக சரித்திரம் இல்லை" எனக் குறிப்பிட்டு சசிகலா அறிக்கை விட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி டீமுக்கு வெற்றி?
எடப்பாடி பழனிசாமி தரப்பின் சார்பாக அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனே தங்க கவசத்தை வங்கி நிர்வாகத்திடம் இருந்து பெறப்போகிறார், இது தொடர்பான தகவல் கிடைத்ததன் காரணமாகவே சசிகலா இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், ஓபிஎஸ்ஸும் மேற்கொண்டு இனி அழுத்தம் கொடுக்கமாட்டார் போலத் தெரிகிறது என இப்போதே பற்ற வைக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications