தூக்கு கயிறை தொங்கவிட்டுவிட்டு.. கட்டிலில் படுத்து தூங்கிய சூர்யாதேவி.. கதவை உடைத்து ஷாக்கான போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூக்குக் கயிறை மாட்டி தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூர்யாதேவியை காப்பாற்ற போலீஸார் வந்து கதவை உடைத்த போது அவர் தற்கொலைக்கான எல்லா பிளானையும் செய்து விட்டு கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

சூர்யாதேவி இவர் டிக்டாக்கில் வீடியோக்களை போடுபவர். அரசியல்வாதிகள், நடிகர்கள், டிக்டாக் பிரபலங்களை தனது வீடியோ மூலம் வசை பாடி வருகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்த பெண் தலைவரை மிகவும் தரக்குறைவாக பேசி சூர்யா தேவி வீடியோ வெளியிட்டிருந்தார்.

புகாரின் பேரில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவரை விருகம்பாக்கம் ஹோட்டலில் இருந்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முழுவதும் வீடியோ போடாமல் இருந்தார்.

கொரோனா பரவலின் போது சண்டை

கொரோனா பரவலின் போது சண்டை

இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது நடிகை வனிதாவும் பீட்டர் பாலும் திருமணம் செய்து கொண்டனர். இதை கண்டித்து தினந்தோறும் வீடியோ போட்டு வந்தார் இவர். இவர்களது திருமணத்தை எதிர்த்த பீட்டர் பாலின் மனைவி ஹெலனுக்கு ஆதரவாக இவர் பேசி வந்தார். விவாகரத்து செய்யாமல் வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதாகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஆபாசமாக வீடியோ

ஆபாசமாக வீடியோ

இதையடுத்து வனிதா போலீஸில் புகார் அளித்தார். அப்போதும் சவால் விடுத்த சூர்யாதேவியை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சூர்யாதேவி சிறைக்கு சென்ற நிலையில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதையடுத்து இவரது அடுத்த குறி டிக்டாக்கில் ஆபாசமாக வீடியோ போடும் பிரபலங்கள் மீது பாய்ந்தது.

கடும் விமர்சனம் செய்த சூர்யாதேவி

கடும் விமர்சனம் செய்த சூர்யாதேவி

அதிலும் குறிப்பாக ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அவர்கள் இருவரையும் தாக்கி பேசி வந்தார். சூர்யாவும் சிக்கந்தரும் லைவிலேயே அனைத்து ஆபாசங்களையும் செய்வதாகவும் சூர்யா தேவி குற்றம்சாட்டினார். மேலும் சிக்கந்தரின் வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா தேவி அவரது தாயிடம் பாச மழை பொழிந்து வீடியோ வெளியிட்டதை கண்டு சிக்கந்தர் நெகிழ்ச்சி அடைந்தார். அப்போது சிக்கந்தருக்கும் ரவுடி பேபிக்கும் இடையே கருத்து வேறுபாடு நடந்து வந்தது. இனி ரவுடிபேபியுடன் நான் சேர்ந்து வாழவே மாட்டேன் என சவால் விட்ட சிக்கந்தர் ஒரு நாள் சூர்யாவை வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக கூறி அவருடன் போய்விட்டார். இதையடுத்து மக்களை சிக்கந்தர் ஏமாற்றுவதாக கூறிய சூர்யாதேவியுடன் மீண்டும் சிக்கா மோதல் போக்கை கடைப்பிடித்தார்.

மதுரைக்கே சென்று அடித்த சூர்யாதேவி

மதுரைக்கே சென்று அடித்த சூர்யாதேவி

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சிக்கந்தர் எனும் சிக்காவை மதுரைக்கே சென்று அவரை செருப்பால் அடித்தார் . இந்த வீடியோ வைரலாகி இருந்தது. இது தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணைக்கு அழைத்த நிலையில் உடல்நிலை சரியில்லை என கூறி ஆஜராகாமல் இருந்து வந்தார்.

சூர்யாதேவி விரைவில் கைது

சூர்யாதேவி விரைவில் கைது

சிக்கந்தரும் அவ்வப்போது தனது வீடியோவில் சூர்யாதேவி விரைவில் கைது செய்யப்படுவார் என கூறிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சூர்யாதேவி நேற்றைய தினம் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் சமூகவலைதளங்களில் நான் பார்க்கும் விஷயங்கள் எனக்கு கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால் நான் ஒரு 100 நாட்களுக்கு வீடியோ போட மாட்டேன். இது என்னுடைய குடும்பத்திற்காகவும் எனது இரு குழந்தைகளுக்காகவும் எடுத்த முடிவு.

80 பேர் ஆதரவு

80 பேர் ஆதரவு

மற்றபடி யாருக்கும் பயந்து கொண்டு எடுத்ததில்லை. நான் நியாயத்திற்காக பாடுபடுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 100 பேரில் 20 பேர் என்னை திட்டுவது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் 80 பேர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்களே, எனக்கு அது போதும். இந்த மாதம் இறுதி வரை வீடியோ போட்டுவிட்டு பின்னர் 100 நாட்களுக்கு இந்த போன் பக்கமே நான் வரபோவதில்லை.

தலைமறைவு இல்லை

தலைமறைவு இல்லை

நான் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். நான் மதுரையில் எனது கணவர் வீட்டில்தான் இருக்கிறேன் என கூறி சூர்யாதேவி ஒரு லைவ் வீடியோவை போட்டிருந்தார். இதையடுத்து இரவு நேரத்தில் அவர் இன்னொரு வீடியோவை போட்டு மதுரை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். அதில் தான் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்காக அனைத்தையும் தயார் செய்துவிட்டு வீடியோவை துண்டித்துவிட்டார்.

வீட்டை சுற்றி வளைத்த போலீஸ்

வீட்டை சுற்றி வளைத்த போலீஸ்

இதையடுத்து அந்த பெண்ணின் வீட்டை தேடி போலீஸார் வந்தனர். அப்போது உள்பக்கமாக தாழிட்டிருந்த அவரது அறையின் கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காததால் போலீஸார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று போய் பார்த்தனர். அப்போது போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தூக்கிட்டு கொள்ள கயிற்றை தயார்படுத்திவிட்டு கட்டிலில் சூர்யாதேவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை எழுப்பி போலீஸார் எச்சரித்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரையும் அவரது குழந்தைகளையும் அவரது உறவினர்களின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸார் ஒப்படைத்தனர். இது போல் நள்ளிரவில் இவர் போட்ட நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+