Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலருக்கும் தெரியாத பட்டின பிரவேசத்தை புகழடைய செய்த கி.வீரமணிக்கு வாழ்த்துக்கள்: மதுரை ஆதீனம் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாதுகாப்பு இல்லாததால் நடந்து சென்றால் நாய் கடிக்கும் எனக் கூறிய மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சியை உலகம் முழுவதும் தெரியப்படுத்திய திராவிடர் கழகத்தின் கி வீரமணிக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்.

தருமபுரம் ஆதீனத்தில் நடக்கும் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. திராவிடர் கழகம் கி வீரமணி எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தடை விதிப்பு

தடை விதிப்பு

இதற்கு இந்து அமைப்பினர், ஆன்மீகவாதிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணம். உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். இதனால் தமிழக அரசு தடையை நீக்க வேண்டும்'' என்றார்.

தடை நீக்கம்

தடை நீக்கம்

இந்நிலையில் தான் தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதற்கு ஆதீனங்கள், பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மதுரை ஆதீனமும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்று மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நினைத்து கூட பார்க்கவில்லை

நினைத்து கூட பார்க்கவில்லை

பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடையை நீக்கியுள்ளது. தமிழக அரசு அனைத்து சமய சம்பிரதாயங்களையும் முதல்வர் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் அவர் அனைத்து சமயத்தினருக்கும் முதல்வராக உள்ளார். இதனால் எல்லா சமயத்தினரையும் முதல்வர் அரவணைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். இந்த பல்லக்கு நிகழ்ச்சிக்கு இவ்வளவு சீக்கிரம் அனுமதி வழங்குவார் என நான் நினைக்கவில்லை.

கி வீரமணிக்கு வாழ்த்து

கி வீரமணிக்கு வாழ்த்து

திராவிடர் கழக தலைவர் கி வீரமணிக்கும் வாழ்த்து. அவர் தான் இந்த பிரச்சனையை துவக்கி வைத்தார். பட்டின பிரவேச நிகழ்ச்சி பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது இது அனைவருக்கும், வெளிமாநிலம், உலக அளவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கி வீரமணிக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். குரல் கொடுத்த எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் நன்றி'' என்றார்.

சு வெங்கடேசன் கருத்து பற்றிய கேள்வி

சு வெங்கடேசன் கருத்து பற்றிய கேள்வி

இந்த வேளையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, ‛‛மடத்தின் சம்பிரதாயங்களை விட அரசியல் சாசன சட்டம் பெரியது. இதனால் அரசியல் சாசன சட்டத்தை மடாதிபதிகள் பின்பற்ற வேண்டும்.சன்னியாசி தர்மப்படி நடந்து தான் செல்ல வேண்டும். பிச்சை எடுத்து ஒருவேளை தான் சாப்பிட வேண்டும்'' என கூறியுள்ளாரே என கேள்வி கேட்கப்பட்டது.

ருசிக்கு சாப்பிடவில்லை பசிக்கு தான்...

ருசிக்கு சாப்பிடவில்லை பசிக்கு தான்...

இதற்கு மதுரை ஆதீனம், ‛‛அனைவரும் சட்டத்தின் படிதான் செயல்படுகிறார்களா. நான் ஓட்டலில் சாப்பிடுவது இல்லை. எனக்கென்று தனியாக சமையல் செய்ய ஆள் இல்லை. அனைவரும் சாப்பிடும் உணவை தான் சாப்பிடுகிறேன். வெளியே போனால் யார் உணவு கொடுக்கிறார்களோ அதை தான் பிச்சை போன்று வாங்கி சாப்பிடுகிறேன். நான் ருசிக்கு சாப்பிடவில்லை. பசிக்கு சாப்பிடுகிறேன். காபி, டீ சாப்பிடமாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்.

டாக் கடிக்கும்

டாக் கடிக்கும்

நான் நடந்து போய் இருக்கிறேன். கன்னியாகுமரி முதல் கோட்டை வர பாதயாத்திரை செய்து இருக்கிறேன். காலில் ரத்தம் கொட்டியுள்ளது. இப்போது நடந்து போனால் நாய் கடிக்கும். பாதுகாப்பு இல்லை. நான் மக்களோடு மக்களாக தான் இருக்கிறேன். திமுக ஆட்சி பற்றி கருத்து தெரிவிக்க மாட்டேன். தடை நீக்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+