தமிழகம் முழுவதும் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு..இருளில் தவித்த மாணவர்கள்... ஏன் என்னாச்சு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. கிராமங்களில் மின் தடை நீடிப்பதால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
மதுரை: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். தேர்வு நேரங்களில் படிக்கும் மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளானதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Recommended Video
பகல் நேரங்களில் அக்னி வெயில் போல அனலடிக்கும் வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு திடீர் மின்வெட்டு கடும் சிரமத்தை தருகிறது. அதே போல மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் ஏற்படும் மின்வெட்டு பிரச்சினையால் வயதானவர்களும் குழந்தைகளும் புழுக்கத்தில் சிக்கி தவிப்பதோடு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாகவே மின்சாரம் தடைபடுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், உறையூர், ராஜா காலனி, கருமண்டபம் மற்றும் பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது. பகல் நேரம் மட்டுமன்றி இரவிலும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டது.

மின்வெட்டினால் தவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், புழுக்கம் தாங்காமல், வீட்டிற்கு வெளியே அமர்ந்து விசிறிகளை வீசி சமாளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கடலூரில் சூழ்ந்த இருள்
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் மின்வெட்டு நிறுத்தப்பட்டு பத்து மணி அளவில் மீண்டும் கொடுக்கப்பட்டது. இதேபோல் பண்ருட்டி, விருதாச்சலம், நெல்லிக்குப்பம் நெய்வேலி, உள்ளிட்ட பல பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால் இருள் சூழ்ந்து தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மெழுகுவர்த்தியின் துணையை நாடினர்.

விவசாயிகள் தவிப்பு
சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் இருந்து தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. ஏசி ,மின் விசிறி இயங்காத காரணத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெளியில் வந்து அமர்ந்திருந்தனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் இருள் சூழ்ந்தது.விவசாயிகளும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஊரில் மின்வெட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நகரப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் இரவு பத்தரை மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணியைக் கடந்தும் மின்சாரம் வராததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

தென் மாவட்டங்களில் தவிப்பு
தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் வாகைக்குளம், தெய்வச் செயல்புரம், சாத்தான்குளம், உடன்குடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பல இடங்களில் மின்வெட்டு தொடர்ந்தது. இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை, தொடர்ந்து அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மின் விசிறி இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.

மின்வெட்டுக்கு காரணம்
அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மின்பற்றாக்குறையை சமாளிக்க
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகா வாட் திடீரென தடைபட்டதே இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வு நேரத்தில்
பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும் எழுந்து படித்து வருகின்றனர். எனவே மின்வெட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பது பெற்றோர்களின் வலியுறுத்தலாகும்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்











Click it and Unblock the Notifications