தக்காளி விலை தாறு மாறு.. கவலையில் இல்லத்தரசிகள்.. தக்காளி இல்லாமல் சமைக்க சிம்பிள் டிப்ஸ்
மதுரை: தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் சாம்பார், குழம்பில் தக்காளி சேர்க்காமல் சமைப்பது எப்படி என்று இணைய தளங்களில் தேடத் தொடங்கியுள்ளனர். அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தக்காளி விலையேற்றத்தினால் கவலையடைந்துள்ள இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று கூகுளில் சர்ச் செய்யத் தொடங்கியுள்ளனர். தக்காளியே இல்லாமல் எப்படி சமைப்பது என்று நாங்கள் டிப்ஸ் தருகிறோம்.
தக்காளி: நமது அன்றாட சமையலில் தக்காளிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. பல வகையான உணவுகளில் தக்காளியும், வெங்காயமும் இடம்பெறாமல் இருக்காது. தக்காளியும் வெங்காயமும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இல்லத்தரசிகளின் பட்ஜெட்டில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வடமாநில தக்காளி வரத்து குறைவால் சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்தது.

விலை உயர்வு: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 1200 டன் தேவை உள்ள நிலையில், மழை காரணமாக சேமித்து வைக்க சரியான இடம் இல்லாததால் 700 டன் மட்டுமே வர வழைத்துள்ளனர் வியாபாரிகள். இதனால் கடந்த சில தினங்களாக கோயம்பேட்டில் ரூ.40 விற்பனை செய்யப்பட்ட தக்காளி. இன்று கிலோ ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ எவ்வளவு: சென்னையின் புறநகர் பகுதிகளில் தக்களி விலை கிலோ ரூ.110 தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120, இஞ்சி ஒரு கிலோ ரூ.200 க்கும் விற்பனை செய்யப்பாட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோடை வெயில், பருவமழை தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக தக்காளிகள் மொத்தம் மொத்தமாக அழுகி நட்டம் ஏற்படுவதால் தக்காளி கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
விலை உயர்வுக்குக் காரணம்: கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி கிலோ விற்பனையான நிலையில் தற்போது அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் திடீர் கோடை மழையால் விளைச்சல் குறைந்து செடிகளில் அழுகும் நிலையில் தக்காளி உள்ளன. இதனா, தக்காளி விலை அதிரடியாக உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயாக விற்பனையாகிறது. புறநகர் பகுதிகளில் 110 ரூபாய் வரை ஒருகிலோ தக்காளி விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வு இந்த மாதம் முழுவதும் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி: தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்து வருவதால் சாம்பார், குழம்பில் தாக்காளி சேர்க்காமல் சமைப்பது எப்படி என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். தக்காளி சேர்க்க வேண்டிய உணவில் புளியை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது சீசன் காலம் என்பதால் புளி விலை குறைவாகவே உள்ளது எனவே சாம்பார், ரசத்தில் புளி அல்லது மாங்காய் சேர்த்து சமைக்கலாம். சாம்பார், குழம்பு சுவையாகவும் இருக்கும்.
என்னென்ன சமையல்: பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா செய்யும் போது தக்காளி சேர்க்காமல் செய்தால் கூடுதல் சுவையோடு இருக்கும். காய்கறி, பனீர் குருமாவிற்கும் தக்காளி சேர்க்காமல் தேங்காய் அரைத்து விட்டு பால் கறி குருமாவாக செய்து அசத்தலாம். ரசத்திற்கு தக்காளி சேர்ப்பதை விட புளியோடு எலுமிச்சை சேர்க்கலாம் சுவை கூடும்.
வெரைட்டி ரைஸ் செய்யலாம்: தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் புளி சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம், கீரை சாதம், பீட்ரூட் சாதம், கேரட் சாதம், பருப்பு பொடி சாதம் என தினம் தினம் வெரைட்டியாக சமைத்து குடும்பத்தினரை அசத்தலாம். இந்த கலவை சாதங்களுக்கு பருப்பு துவையல், எள்ளுத்துவையல், புதினா துவையல் என செய்து தரலாம். வெரைட்டி பொடிகள்: கறிவேப்பிலை பொடி, பூண்டு பொடி, புதினா பொடி, பருப்பு சாத பொடி போன்ற பொடிவகைகளை அரைத்து வைத்துக்கொண்டால் தாக்காளி விலை உயர்வைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கைவசம் ஐடியா இருக்கும் போது தக்காளி விலை உயர்வை நினைத்து கவலைப்பட வேண்டாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications