முடிந்தால் சட்டசபையை முடக்கிப்பாருங்கள்.. 200 சீட் ஜெயிப்போம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு உதயநிதி சவால்
முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்கள் என ஈபிஎஸ்சுக்கு சவால் விடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை: சட்டசபையை முடக்கி மீண்டும் தேர்தல் நடத்தினால் 200 இடங்களில் திமுக வெற்றிபெறும் என உதயநிதி எம்எல்ஏ தெரிவித்தார். முடிந்தால் சட்டசபையை முடக்கிப் பாருங்கள் என ஈபிஎஸ்சுக்கு சவால் விடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்ற நிலையிலும், திமுக அரசு மக்களுக்கு தலா ரூ.4,000 வழங்கியது என்று குறிப்பிட்டார்.
திமுக கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தது. அப்போது கொரோனா இரண்டாவது அலை வீசியது. அப்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. மருந்து இல்லை, ஊசியில்லை மக்கள் வரிசையில் கால் கடுக்க காத்திருந்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டதாக தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகை விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார். ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்களில் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார் உதயநிதி. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின்பால் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் குறைத்தார்.

பெண்கள் முடிவுதான்
தாய்மார்கள் முடிவெடுத்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று சொன்னார் உதயநிதி. என்ன யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா என்றும் பெண்களைப் பார்த்து கேட்டார்.
இதை எல்லாம் நினைவுபடுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

கஜானா காலி
உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி உங்களை காணவே நான் இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் கஜானாவை காலி செய்து ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றது அதிமுக ஆட்சி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் திண்டாடினாலும் திமுக அரசு மக்களுக்கு கொரோனா கால நிதியாக தலா ரூ.4,000 வழங்கியது என்று குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி
அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா தடுப்பூசியை வீணாக்கி விட்டார்கள். இப்போது பத்து கோடி பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறோம். கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொண்டு எளிதாக கடந்து வந்திருக்கிறோம் என்றார் உதயநிதி ஸ்டாலின். கொரோனா வார்டுக்குள் சென்று நேரடியாக ஆய்வு செய்த ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலின்தான் என்றும் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால்
எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களாக சட்டசபையை முடக்கப்போவதாக கூறி வருகிறார். நான் உங்களை விட சிறியவன்தான் உங்களுக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் சட்டசபையை முடக்கித்தான் பாருங்களேன் என்று மீண்டும் மீண்டும் கூறினார் உதயநிதி ஸ்டாலின். தைரியம் இருந்தால் சட்டசபையை முடக்கிப்பாருங்கள் என்றார்.

200 இடங்களில் திமுக வெற்றி
யார் இருக்கிற தைரியத்தில் நீங்க பேசறீங்க என்று கேட்ட உதயநிதி மேல ஒருத்தர் இருக்காரு என்று மக்கள் சொன்னதை கேட்டு திருப்பி சொன்னார். சட்டசபையை முடக்கி மீண்டும் தேர்தல் நடத்தினால் 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய உதயநிதி, மோடி எங்க டாடி என்று சொல்கிற அதிமுக வேண்டுமா? தமிழ்நாட்டிற்கு குரல் கொடுக்கும் திமுக வேண்டுமா என்று கேட்டார்.

சிம்ம சொப்பனம்
மோடி அவர்களைப் பார்த்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி சவால் விட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக கால் வைக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அப்படி அதிமுக,பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் உதயநிதி தெரிவித்தார். தான் காணாமல் போய் விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தேடிக்கொண்டிருக்கிறார்.

டேபிளுக்கு கீழே பார்க்காதீர்கள்
எங்க வீட்டில் கூட என்னை தேட மாட்டார்கள். என்னை அந்த அளவிற்கு தேடுகிறார்கள். சட்டசபையில் அவருக்கு எதிரேதான் அமர்ந்திருந்தேன். அவர் டேபிளுக்கு மேலே பார்க்கவில்லை. கூவத்தூர் சென்று ஜெயிக்கவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்றும் கூறினார். மதுரையில் பிரச்சாரம் முடித்து விட்டு திண்டுக்கல்லுக்கு பிரச்சாரம் செய்யப்போகிறேன். எடப்பாடி பழனிச்சாமி கேட்டால் அவரிடம் சொல்லுங்கள் என்றும் சொன்னார்.

செங்கல் எடுத்துக்கொண்டு வரவில்லை
எய்ம்ஸ் எப்போது வரும் என்று மக்கள் கேட்கவே, அதை இன்னும் மறக்கவில்லையா, செங்கல் இன்று கொண்டு வரவில்லை என்று சொன்னார். கேஸ் மானியம் எப்போது கொடுப்பீர்கள் என்று பெண்கள் கேட்டதற்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்யமாக பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே பிரச்சாரம் செய்தார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications