பொங்கல் ஹீரோ “விஜய்”.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் -ரூ.8 லட்சம் காரை பரிசாக கொடுத்த ஸ்டாலின்
மதுரை: உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற வீரர் 28 காளைகளை பிடித்து முதலிடத்தை பிடித்து உள்ளார். இதன் மூலம் முதல் பரிசான ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார். 2 வது இடத்தை பிடித்த கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.
தை பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழர் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தொடங்கி நடைபெற்றது.
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறது.

சிறப்பு விருந்தினர்கள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

பலத்த பாதுகாப்பு
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மதுரை சரக டிஐஜி ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தகுதி நீக்கம்
இந்த போட்டியில் 318 மாடுபிடி வீரர்களும் 1004 காளைகளும் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள். இப்படி ஒரு சுற்றுக்கு 45 நிமிடங்கள் என மொத்தம் 11 சுற்றுக்கள் நடைபெற்றன. இதில் உரிய ஆவணங்கள் இல்லாத 40 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், மது அருந்தியதற்காக 4 வீரர்களும், உடல் தகுதி இல்லாததால் 2 வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

விறுவிறுப்பான போட்டி
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை எகிறிப் பிடித்தனர் காளையர்கள். நன்கு பயிற்சியளிக்கப்பட்ட காளைகள், யாருக்கும் அசராமல் மைதானத்தில் ரவுண்டு கட்டி பிடிகொடுக்காமல் கெத்து காட்டி பரிசை வென்றன. இதில் சிறப்பான செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்கள், வீரர்களுக்கு தங்க காசு, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விஜய் முதலிடம்
இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற வீரர் 28 காளைகளை பிடித்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ரூ.8 லட்சம் மதிப்புள்ள நிசான் மேக்னைட் கார் வழங்கப்பட்டது. அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் 17 காளைகளை பிடித்து இதில் 2 வது இடத்தில் உள்ளார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்படுகிறது.

மூன்றாமிடம்
மதுரை விளாக்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற வீரர் 13 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறியதால் மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வீரர்களை போன்றே சிறந்த காளையின் உரிமையாளருக்கும் பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications