Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீதி உலாப் போக மகேந்திரா; மலையேற Toyota; கடைக்குப்போக fortuner: வரிச்சியூர் வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனது சேகரிப்பில் உள்ள பல வகையான கார்களை பற்றியும் தங்க நகைகள் பற்றியும் வரிச்சியூர் செல்வம் மிக விரிவாக விளக்கம் அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நடமாடும் நகைக்கடை என்று சொன்னாலே வரிச்சியூர் செல்வம் பெயர்தான் ஞாபகத்திற்கு வரும். கழுத்தில் ஒரு கார் டயர் சைசுக்கு ஒரு தங்கச் சங்கலி. கையில் ஒரு அடி அளவுக்கு தங்க பிரேஸ்லெட். ஒவ்வொரு விரலிலும் ஒரு தங்கக் கட்டி சைஸ் மோதிரம் என பார்த்தாலே அதிரும் தோரணையில் இருக்கிறார். வரிச்சியூர் செல்வம் என்றால் தங்க நகைக்குத்தான் பேமஸ் என நினைத்துக் கொண்டிருந்த பலருக்கு அவர் வீட்டு முன்னால் விதவிதமான கார்கள் நிற்பதைப் பார்த்து ஷாக்தான் அடிக்கிறது.

varichiyur selvam madurai

மலை ஏற வேண்டுமா? அதற்கு, டோயோட்டா. கடைக்கு மளிகை சாமான் வாங்கப் போக வேண்டுமா? அதற்கு, ஹூண்டாய். சும்மா வீதி உலா போகவேண்டுமா? அதற்கு, ஒரு கார். நண்பர்களை அழைத்து வரவேண்டுமா அதற்கு ஃபார்ச்சூனர். இப்படி வீட்டுக்கு முன்னால் வகைவகையாக கார்கள் உலாவருகின்றன. இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் அளித்துள்ள ஒரு பேட்டியில், "எங்க அப்பா காலத்தில் அவருக்கு மதுரையில் 30 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் பழுதடைந்துவிட்டதால், இடித்துவிட்டேன். இப்போது மதுரையில் 4 வீடுகள் உள்ளன. சென்னையில் ஒஎம்ஆரில் ஒரு வீடு இருக்கிறது. எனக்கு கார் என்றால் அதிகம் பிடிக்கும். இப்போது Toyota கம்பெனி Hilux என்று புதிய மாடல் கார் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எனக்கு ஜாலியாக டூர் போகப் பிடிக்கும். அதற்கு ஏற்ற சரியான வசதிகளுடன் இது இருந்ததால் அதை வாங்கிவிட்டேன்.

இந்த காரில் பின்புறம் டிக்கி இருக்காது. அதற்குப் பதிலாக ஓபனாக ஒரு இடம் கொடுத்திருப்பார்கள். அதனால் பலர் இதை விரும்புவதில்லை. 50 லட்சம் போட்டு வாங்க தயங்குவார்கள். எனக்கு இந்த மாடல் பிடித்திருந்தது. சுற்றுலா போவதற்காகவே இதை வாங்கிவிட்டேன்.

Land Rover கம்பெனியில் ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக டிஸ்கவரியை எடுத்தேன். கருப்பு கலர் நன்றாக இருக்கும். எனவே அதை தேர்வு செய்தேன். மதுரையில் மட்டும் 5 கார்கள் இருக்கின்றன. சென்னையில் 4 கார்கள் இருக்கின்றன. ஆனால், என் பெயரில் ஒரு காருமே கிடையாது. நான் போட்டுள்ள நகைகள்கூட மகன், மருமகள் பெயரில் வாங்கி பரிசாக கொடுத்தவை. இப்படி அனைத்து உறவினர்கள் பெயரில்தான். இப்போதுகூட மகேந்திரா ஒரு வண்டியும் மறுபடியும் டோயோடாவில் fortuner வாங்கினேன். அது நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்து வருவதற்காக மட்டுமே பயன்படுத்துவேன்.

varichiyur selvam madurai

வரிச்சியூர் செல்வம் என்றால் கழுத்து நிறைய தங்க நகைகள் போட்டிருப்பார் என்று மக்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்களோ அதைப்போலவே என் கார் என்றால் அதைக் கண்டுபிடிப்பதற்காக எல்லா வண்டி எண்களும் 100 தான் இருக்கும். அதற்கு முன்பாக 302 என்று வைத்திருந்தேன். அதைப் பார்த்த போலீஸ்கார்கள் 302 என்றால் கொலை வழக்குப் பதிவு செய்யும் சட்டப்பிரிவு என்று சொன்னார்கள். ஆகவே அதை வைக்க வேண்டாம் என்றார்கள். அவர்கள் சொன்னதால் 100 என கார் எண்களை மாற்றிவிட்டேன். ஒரு ஃபேன்சி நம்பர் வாங்க வேண்டும் என்றால் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். சில நேரம் ஒரே ஊரில் பதிவில் 100 எண் கிடைக்காது. அதனால் மதுரை, வேலூர்,திருச்சி என எந்த ஊரில் 100 பேன்சி நம்பர் பதிவு கிடைக்கிறதோ அங்கே வண்டியை பதிவு செய்வேன்.

பல கார்கள் இருந்தாலும் சமீப காலமாக அதிகம் மனதிற்குப் பிடித்த வண்டி Toyota Hilux தான். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் போகாத இடம் இல்லை. வாங்கி 3 மாதங்கள்தான் ஆகின்றது. அதற்கு அவ்வளவு இடங்களைச் சுற்றிவிட்டேன். எனக்குச் சாகசம் என்றால் பிடிக்கும். காரில் போகவே முடியாது என்று சொல்லும் இடத்திற்குப் போய் காட்டுவேன். இந்தியாவில் காரில் போகாத பகுதியே கிடையாது. சிக்கிம் மாநிலம் கேங்டாக் வரை போய்விட்டேன். அதேபோல் குலு மணாலி வரைப் போய் விட்டேன். சிம்லா போய் இருக்கிறேன்.

வெளிமாநிலங்கள் போகும்போது நான் அணிந்துள்ள நகைகளைப் பார்த்துவிட்டு திடீரென்று அதிகாரிகள் விசாரிப்பார்கள். அதற்காகவே வண்டியில் வருமான வரி கட்டிய ஆவணங்கள், நகை வாங்கிய ரசீதுகள் அனைத்திற்கும் ஒரு ஜெராக்ஸ் வைத்திருப்பேன். அதைக் காட்டினால் உடனே விட்டுவிடுவார்கள். நான் காவல்துறைக்கு அதிகம் மரியாதை தருவேன். மற்றபடி யாராவது மிரட்டினால் அஞ்சமாட்டேன். ஒரு முறை ஜார்கண்ட் போய் இருந்தேன். ஒரு சுங்கச்சாவடி வரும்போது இரவாகிவிட்டது. எனவே அருகில் அங்கேயே நிறுத்திவிட்டு காரிலேயே தூங்கிவிட்டோம்.

விடிந்ததும் ஒரு பெரிய குரூப் சுத்துபோட்டுவிட்டார்கள். எப்படி இங்கே தங்கினீர்கள்? ராத்திரி உங்களை சுட்டு இருப்பார்களே என இந்தியில் மிரட்டினார்கள். உடனே என் கூட இருந்த தம்பியை, 'நாங்கள் அதை எல்லாம் கடந்து வந்தவங்க தாண்டா' என சொல்லச் சொன்னேன். உடனே போய் விட்டார்கள். பீகார், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்கள் அச்சுறுத்தல் நிறைந்தவை. என் வண்டியில் கத்தி கடப்பாரை என எந்த ஆயுதமும் வைத்துக்கொள்வதில்லை. 2 கிரிக்கெட் பேட் வைத்திருப்பேன். அதான் சேஃப்டி. யானைக்கும் அடி சறுக்கும். ஆகவே வெளிமாநிலங்கள் போனால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவேன். தமிழ்நாடு போல அமைதியான மாநிலம் வேறு எங்கேயும் கிடையாது. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் மீண்டும் தமிழ்நாட்டில்தான் பிறக்க ஆசைப்படுகிறேன்" என்கிறார்.

ஒவ்வொரு கார் கதவு தனியாக திறக்கிறது. டாப் தனியாக திறக்கிறது. உள்ளே பார்த்தால் ரதம் போல் இருக்கிறது. செல்வத்துடன் எப்போதும் 10 பேர்கூடவே இருக்கிறார்கள். அவர் மகனும் அவரைப் போல கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு அப்பாவுக்கு துணையாகவே இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+