75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. மதுபோதையில் இருந்த காமக்கொடூரன் கைது!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அளவுக்கு அதிமான மதுபோதையில் அவர் இந்த செயலை செய்தது தெரியவந்தது.

Recommended Video

    75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. மதுபோதையில் இருந்த காமக்கொடூரன் கைது - வீடியோ

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்கெட்ரோடு பகுதியை சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி சோழவந்தான் கடைவீதிகளில் யாசகம் பெற்று அப்பகுதியில் உள்ள கடை முன் இரவு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்

    75 வயது மூதாட்டி

    75 வயது மூதாட்டி

    நேற்று இரவு மூதாட்டி வழக்கம்போல் கடை முன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்தார். திடுக்கிட்டு எழுந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மூதாட்டியை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

    மடக்கிப்பிடித்தனர்

    மடக்கிப்பிடித்தனர்

    இந்த சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சோழவந்தான் காவல் நிலையத்தில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவன் சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பது தெரியவந்தது.

    அளவுக்கு மீறிய மதுபோதை

    அளவுக்கு மீறிய மதுபோதை

    அளவுக்கு மீறிய மதுபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கொலை செய்துவிட்டதாக அவன் ஒப்புக்கொண்டான். மேலும், கைது செய்யப்பட்ட மணிமாறன் மீது இரு கொலை வழக்கு உட்பட 6 வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு சில வழக்கில் கைது செய்யப்பட்டமணிமாறன் கடந்து 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

    பொதுமக்கள் கோரிக்கை

    பொதுமக்கள் கோரிக்கை

    அளவுக்கு மீறிய மதுபோதை காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதேபோல் மது அருந்தியவர்கள் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தமிழகத்தில் தொடர்கதையாகி விட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் அல்லது 50 சதவிதம் அளவுக்கு மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+