நான்கு கை நான்கு கால்களுடன் ‘கடவுளின் குழந்தை’! நடிகர் சோனு செய்த நெகிழ்ச்சி செயல்! நீங்களே பாருங்க!
மும்பை : பீகாரில் நான்கு கை நான்கு கால்களுடன் பிறந்த சிறுமிக்கு பிரபல நடிகர் சோனு சூட் உதவி செய்த நிலையில் சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். இதனையடுத்து நடிகர் சோனுவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் சோனு சூட்.
கொரோனா முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட அவரது லாப நோக்கமற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது

சோனு சூட் உதவி
சோனு சூட் தற்போது எம்டிவியின் ரோடீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். புதிய சீசனின் முதல் எபிசோட் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது. அவர் சமீபத்தில் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதியின் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தில் சந்த் பராய் வேடத்தில் நடித்தார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இப்படம், முஹம்மது ஆஃப் கோரின் படையெடுப்பிற்கு எதிராகப் போராடிய இடைக்கால இந்திய மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

பீகார் சிறுமி
கொரோனா காலத்தில் ரியல் ஹீரோ என ரசிகர்களால் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட சோனு சூட், இப்போது சௌமுகி குமாரி என்ற பெண்ணுக்கு உதவியுள்ளார். பீகாரைச் சேர்ந்த சௌமுகி நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறந்தவர். கடந்த வியாழன் அன்று சௌமுகி மற்றும் தன்னை பற்றிய படங்களைப் பகிர்ந்து கொண்ட சோனு சூட், அவருக்கு உதவப் போவதாக தெரிவித்திருந்தார்.

சிறுமிக்கு அறுவை சிகிச்சை
சமூக வலைதளங்களில் இந்த சிறுமி குறித்து அறிந்த சோனு சூட் அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார். வெறும் பேச்சோடு இல்லாமல் குஜராத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கூடுதலாக இருந்த இரண்டு கைகளும் கால்களும் அகற்றப்பட்டன. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கும் வகையில் அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பலரும் நன்றி
அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் சௌமுகியின் படங்களை வெளியிட்டுள்ள சோனு, " சௌமுகி குமாரி நலமுடன் இருப்பதாகக் கூறியிருந்தார். கடந்த புதன்கிழமை அவருக்கு 7 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சிறுமிக்கு வாழ்த்துக்களையும், சோனு சூட்டிற்கு நன்றிகளையும் ஆயிரக்கணக்கானோர் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர் உருக்கும்
பிரபல பாலிவுட் பிரபலங்களான சுனைல் ஷெட்டி, பூஜா பத்ரா, ரிதிமா பண்டிட் மற்றும் ஈஷா குப்தா ஆகியோர் இதய ஈமோஜிகளை பறக்கவிட்டுள்ளனர். ரசிகர்கள், "பூமியின் சிறந்த மனிதர்", "ஏழைகளுக்கு உதவி செய்பவர்" என்றார். "ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் இதயங்களை வெல்கிறீர்கள்" "ஐயா, உங்களைப் போன்றவர்கள் மிகக் குறைவு. கடவுள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்" என ரசிகர்கள் பலரும் தங்கள் நன்றிகளை உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications