Ambani: முகேஷ் அம்பானி வீட்டு வேலைக்கு ஆள்தேர்வு எப்படி நடக்கும் தெரியுமா? சம்பளத்தை கேட்டால் தலைசுற்றிடும்
சென்னை: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் மட்டும் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை 600 - 700 வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சமையல்காரர்கள், வீட்டை பராமரிப்பவர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள், பாதுகாவலர்கள் என பல்வேறு நிலை ஊழியர்கள் இங்கு பணியாற்றும் நிலையில் அவர்களுக்கு 6 இலக்கத்தில் சம்பளம், இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஊழியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
உலக பணக்காரர் பட்டியலில் 18 ஆம் இடம் வகிப்பவரும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரருமான முகேஷ் அம்பானியின் வீடு மும்பையில் உள்ளது. மும்பையில் உள்ள இவரது வீடு உலகிலேயே விலை மதிப்புமிக்க வீடுகளில் ஒன்றாக உள்ளது.

முகேஷ் அம்பானி வீடு
முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கும் இந்த வீட்டிற்கு அன்டிலியா' (Antilia) என பெயரிடப்பட்டுள்ளது. 27 தளங்களில், சுமார் 1.120 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் ஆடம்பரம் மற்றும் அதன் உள்ளே இருக்கும் வசதிகள் குறித்து வாய்பிளக்க வைக்கும் வகையில் அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த சொகுசு பங்களாவை கட்டி அம்பானி குடியேறினார். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடியாகும். இந்த வீட்டில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாகவே பெருமளவு தொகையை அம்பானி அள்ளி கொடுக்கிறாராம்.
ஊழியர்களுக்கு 6 இலக்கத்தில் சம்பளம்
அதாவது, 6 இலக்க சம்பளம், இதர சலுகைகள் என அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிகராக சம்பளம் வழங்கப்படுகிறது. அவரது வீட்டில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 600 - 700 வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சமையல்காரர்கள், வீட்டை பராமரிப்பவர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள், பாதுகாவலர்கள் என பல்வேறு நிலை ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.
எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?
முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட டிரைவரின் சம்பளம் மட்டும் மாதம் ரூ.2 லட்சமாம். அல்லது ஆண்டுக்கு ரூ.24 லட்சம் டிரைவருக்கே வழங்கப்படுகிறது. இந்த சம்பளமானது பல கார்ப்பரேட் நிறுவனங்களில் சீனியர் லெவல் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியமாகும். கைநிறைய சம்பளம், சலுகைகள் என அள்ளிக்கொடுக்கும் அம்பானி வீட்டில் ஊழியர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று பலருக்கும் நினைக்க தோன்றும்.
இது தொடர்பாக தற்போது ஊடக தகவல்கள் சில வெளியாகியுள்ளன. அண்டிலியா வீட்டில் வேலை செய்பவர்கள் அதிக திறன் மிக்கவராக இருக்க வேண்டும் என்று முகேஷ் அம்பானி விரும்புவாராம். இதனால், கடுமையான கேள்விகள் அடங்கிய எழுத்து தேர்வு முதலில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றால் மட்டும்தான், நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.
சரிபார்ப்பு, திறன் தேர்வு
எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறாரோ அதற்கு ஏற்ற வகையில் திறன் தேர்வுகள் வைக்கப்படும். அதாவது, சமையலர் பணிக்கு விண்ணப்பித்தால் அவர் அதில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். பாத்திரம் கழுவும் வேலைக்கு விண்ணப்பித்தால் கூட கடுமையான சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வு நடைமுறைக்கு பின்னரே தேர்வு செய்யப்படுவார்கள்.
அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மட்டுமின்றி மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகையும் அளிக்கப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications