ஆர்யன்கான் வழக்கில் திருப்பம்: என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே திடீர் பணியிட மாற்றம்.. பின்னணி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2-ம் தேதி கடலோரத்தில் ஒரு சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதைப் பொருள் விருந்து நடந்தது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.
அப்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான், முக்கிய புள்ளிகள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்யான் கான் கைது
இதனை தொடர்ந்து ஆர்யான்கான் உள்ளிட்ட 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுளளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துளளதாகவும் போதை தடுப்பு பிரிவு போலீஸார் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

ஜாமீனில் விடுவிப்பு
இதனை தொடர்ந்து ஆர்யன்கான் உள்ளிட்டோர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆர்யன்கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து கடந்த 28-ம் தேதி ஆர்யன்கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்பின்பு ஆர்யன்கான் சிறையில் இருந்து வீடு திரும்பினார்.

ரூ.25 கோடி பேரம்
இதற்கிடையே போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க போதை தடுப்பு பிரிவு போலீஸார்(என்.சி.பி) ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும், அதில் ரூ.8 கோடி மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீர் வான்கடே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு வடக்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் கியானேஷ்வர் சிங் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு விசாரித்தது.

சமீர் வான்கடே பணியிட மாற்றம்
இந்த நிலையில் சமீர் வான்கடே போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள என்.சி.பி., தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சமீர் வான்கடேவுக்கு பதிலாக மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான குழு ஆர்யன் கான் வழக்கையும், சமீர் வான்கடே கையாண்ட மற்ற நான்கு வழக்குகளையும் விசாரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications