மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3ம் அலை தொடங்கிவிட்டதா?.. "டாஸ்க் போர்ஸ்" எச்சரித்தது போலவே.. மகாராஷ்டிராவில் திடீரென 10000+ கேஸ்கள்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் குறைந்து வந்த நிலையில், தற்போது திடீரென கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் மகாராஷ்டிராவில் பதிவாகி உள்ளது.

Recommended Video

    Delta Variant 3ஆவது அலையை தீவிரப்படுத்துமா?? | Mr. Vijayanand interview | Oneindia Tamil

    இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு முடிவிற்கு வந்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் 3ம் அலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேசிய அளவில் 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே கேஸ்கள் வருகின்றன.

    இந்த நிலையில் புதிதாக பரவி வரும் டெல்டா + வகை கொரோனா காரணமாக கேஸ்கள் உயரலாம், மூன்றாம் அலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளாவில் ஏற்கனவே டெல்டா + வகை கேஸ்கள் அதிகமாக வர தொடங்கி உள்ளன.

    பிரேசிலில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு- ஒரே நாளில் 1,14,139 பேருக்கு பாதிப்பு; 2,343 பேர் மரணம் பிரேசிலில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு- ஒரே நாளில் 1,14,139 பேருக்கு பாதிப்பு; 2,343 பேர் மரணம்

    அச்சம்

    அச்சம்

    இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் நேற்று 10066 கேஸ்கள் ஒரே நாளில் பதிவானது. சராசரியாக 6000- 8500 கேஸ்கள் மகாராஷ்டிராவில் பதிவாகி வந்த நிலையில் தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் அங்கு பதிவாகி உள்ளது.

    திங்கள்

    திங்கள்

    கடந்த திங்கள் கிழமை 6,270 கேஸ்கள் மட்டுமே பதிவான நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திடீரென கேஸ்கள் அதிகரிப்பது மூன்றாம் அலைக்கான தொடக்கமாக இருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில் லாக்டவுன் தளர்வுகள் வந்த 10 நாட்களுக்குள் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

    கேஸ்கள்

    கேஸ்கள்

    இதனால் மீண்டும் மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்தது. பொதுவாக ஒரு அலை தாக்குதலுக்கு பின் அதிகபட்சம் 100 நாட்கள் இடைவெளியில் அடுத்த அலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் மூன்றாம் அலை வேகமாக வர வாய்ப்புள்ளது.

    எப்போது

    எப்போது

    அந்த வகையில் மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்துள்ளது. மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் நடந்த மீட்டிங்கில் டாஸ்க் போர்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை மட்டும் 8 லட்சம் வரை செல்லும் என்று கூறியுள்ளனர்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    மக்கள் வெளியே செல்வதும், கூட்டமாக கூடுவதாலும் கண்டிப்பாக மூன்றாம் அலை ஏற்படும். இது கேஸ்களை அதிகரிக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று எச்சரித்து இருந்தனர். அவர்கள் எச்சரிக்கை விடுத்தது போலவே தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர தொடங்கி உள்ளது 3ம் அலையாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Coronavirus 3rd wave: Maharashtra gets 10k+ cases yesterday all of a sudden after the TASK force warning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X