தாத்ரா - நாகர் ஹவேலி சுயேச்சை எம்பி தற்கொலை - மும்பை ஹோட்டல் அறையில் சடலம் மீட்பு

தாத்ரா - நாகர் ஹவேலி லோக்சபா தொகுதியின் எம்பி மோகன் டெல்கர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: சுயேட்சை எம்பி ஒருவர் மும்பை ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எம்பியின் சடலம் கிடந்த அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டவரின் பெயர் மோகன் சஞ்சிபாய் டெல்கர் என்பதாகும். 58 வயதான இவர் இந்திய யூனியன் பிரதேசத்தின் தாத்ரா - நாகர் ஹவேலி லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்தவர்.

Dadra and Nagar Haveli MP Mohan Delkar allegedly died by suicide

பாரதிய நவசக்தி கட்சியின் தலைவரான இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மரைன் டிரைவில் உள்ள சீ கிரீன் ஹோட்டல் அறையில் இன்று சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் உள்ள அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மோகன் டெல்கர் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களை சேகரித்த நிலையில் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் சஞ்சிபாய் டெல்கர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்கின்றனர். மேலும், டெல்கர் இறந்து கிடந்த அறையில் தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+