கட்சியில் இருந்து விலகியவருக்கு சின்னம் வழங்க கூடாது..தேர்தல் ஆணையத்தில் உத்தவ் பதில்..கிளைமேக்ஸ்?
மும்பை: ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து தானகவே விலகிவிட்டார். எனவே கட்சியின் சின்னத்திற்கும், பெயருக்கும் அவரால் உரிமை கோர முடியாது என தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் ஜெயித்து விட்டு, கங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்துக்கொண்டது பாஜகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

எதிராக மாறிய ஏக்னாத் ஷிண்டே
இந்த நிலையில், சிவசேனா தனது அடிப்படை கொள்கையில் சமரசம் செய்து கொண்டு விட்டதாக அதிருப்தி அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவருமான ஏக்னாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேக்கு எதிராக ஒரு அணியை உருவாக்கினார். அவர் திடீரென தனக்கு ஆதரவாக சிவசேனாவின் 40 எம்.எல்.ஏக்களுடன் தனி அணியாக சென்று பாஜகவுடன் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இரு அணிகளாக சிவசேனா
இதையடுத்து, சிவசேனா கட்சி இரு அணிகளாக பிரிந்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் என சிவசேனா கட்சி இரு அணியாக பிளவுபட்டுள்ளது. இரு பிரிவினரும் கட்சியின் பெயரும் சின்னமும் தங்களுக்குத்தான் வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியுள்ளனர். கட்சியின் சின்னம் மற்றும் பெயருக்கு உரிமை கோரிய ஏக்நாத் ஷிண்டே அணியின் மனு தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் உள்ளது.

அந்தேரி கிழக்கு தொகுதியில்..
இதனிடையே, அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் வில் அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரேவுக்கு ஒதுக்கக் கூடாது என்று ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பதில் மனுவை இன்றைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தவ் தாக்கரே அணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உரிமை கோர முடியாது
அந்த மனுவில், ''ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து தானகவே விலகிவிட்டார். எனவே கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் அவரால் உரிமை கோர முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரத்தில் இரு அணிகளில் யாருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பதையும் இரு தரப்பு ஆதரவாளர்களும் பரபரப்புடன் எதிர்பார்த்து உள்ள்னர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications