'குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது'.. 'அது சகோதர மாநிலம் தான்'.. தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசம்!
மும்பை: மகாராஷ்டிராவில் அமைக்கப்படுவதாக இருந்த வேதாந்தா- பாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், அவர்களது விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 'குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது என்றும் அது தனது அண்டை மாநிலம் தான்' என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்ட செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டது.
ஆனால் இந்த திட்டம் திடீரென மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்படாது என அறிவிக்கப்பட்டதோடு, இந்த திட்டத்தை குஜராத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

குஜராத்துக்கு மாற்றம்
இந்த புதிய ஆலை திட்டத்தால் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் திடீரென ஏன் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்றும், இதை திட்டத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்த வேண்டும் என்றும் ஆளும் பாஜக- ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான கட்சியினரை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டின.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
தொடர்ந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர் ஆளும் பாஜனதா மற்றும் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை விமர்சித்து வந்தனர். இதன் பின்னர் வேதாந்தா- பாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு சமமான அல்லது அதைவிட பெரிய திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளும் கூட்டணியை விமர்சித்து வருகின்றனர்.

தேவேந்திர பட்னாவிஸ் பதில்
இந்த நிலையில், வேதாந்தா- பாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலை குஜராத் மாநிலம் சென்றதால் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான பாஜக, இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறந்துள்ளது. இது தொடர்பாக பதில் அளித்துள்ள அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''முந்தைய மகாஸ் விகாஸ் அகாடி கூட்டணி அரசில் எந்த சலுகையை பெறவேண்டும் என்றாலும் 10 சதவீதம் கமிஷன் கேட்கப்பட்டது. இதனால், குஜராத் முந்திக்கொண்டது. நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

குஜராத் பாகிஸ்தான் அல்ல
அனைத்து வகையிலும் நாங்கள் முயற்சித்தோம். எதையுமே செய்யாதவர்கள் தற்போது எங்களை நோக்கி கை காட்டுகின்றனர். தற்போது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத்தை விட மகாராஷ்டிரா மாநிலம் பின் தங்கியிருப்பது உண்மைதான். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை விட மகாராஷ்டிரா மாநிலத்தை முன்னுக்கு கொண்டு வருவோம். குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அது சகோதர மாநிலம் தான். இது ஒரு ஆரோக்கியமான போட்டி மட்டுமே. அனைத்தையும் தடுப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதனால், நம்மால் குஜராத்தை முந்த முடியவில்லை'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications