"டி கேங்க்".. கடனை திரும்பகேட்ட பெண் எழுத்தாளர் பலாத்காரம்! பின்னணியில் தாவூத் இப்ராஹிம் கும்பல்?
மும்பை: மும்பையில் ரூ.2 கோடி கடனை திரும்ப கேட்ட நிலையில் 75 வயது தொழிலதிபர், 35 வயது பெண்ணை பலாத்காரம் செய்து நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜூகு பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். எழுத்தாளர். இவரிடம் 75 வயது நிரம்பிய தொழில் அதிபர் ரூ.2 கோடி கடன் வாங்கியிருந்தார்.
நீண்ட நாட்களாக ஆகியும் இந்த கடனை அவர் திரும்ப செலுத்தவில்லை. இதனால் கோபமடைந்த பெண் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இருப்பினும் ஏதாவது காரணத்தை கூறி அந்த தொழில்அதிபர் சமாளித்து வந்தார்.

கடனை திரும்ப கேட்ட எழுத்தாளர்
இருப்பினும் பெண் எழுத்தாளர் விடவில்லை. தொடர்ந்து கடன் பணத்தை திரும்ப கேட்டு வந்தார். இந்நிலையில் தான் அந்த தொழில்அதிபர் மும்பை ஜூகு பகுதியில் உள்ள ‛பைவ்ஸ்டார்' ஓட்டலுக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி எழுத்தாளரிடம் கூறினார். இதையடுத்து பணத்தை வாங்கும் நோக்கத்தில் எழுத்தாளர் ஓட்டலுக்கு சென்றார்.

பலாத்காரம்; கொலை மிரட்டல்
அங்கு வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே பெண் எழுத்தாளரை, தொழில்அதிபர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் கொலை செய்து விடுவதாக செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசில் புகார்
இதற்கிடையே எழுத்தாளருக்கு போன் செய்த நபர், தாவூத் இப்ராஹிம் பெயரில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது தொழில் அதிபருக்கு எதிராக போலீசில் ஏதேனும் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன பெண்எழுத்தாளர் பாதுகாப்பு கருதிஅம்போலி போலீசில் புகார் செய்தார்.

விசாரணை; அதிர்ச்சி
ஆனால் சம்பவம் எம்ஐடிசி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால் வழக்கு அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். இதற்கிடையே கடனை திரும்ப கேட்ட பெண் எழுத்தாளரை பலாத்காரம் செய்து, தாவூத் இப்ராஹிம் பெயரில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications