மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரைதான் நம்புவது.. கட்சியும் குடும்பமும் பிளவுபட்டு விட்டது.. மோசம் போய்விட்டோம்.. பவார் மகள் வேதனை

கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: "வாழ்க்கையில் யாரை நம்பறது? இப்படி நான் உணர்ந்ததே இல்லை. என் வாழ்க்கையில் நான் மோசம் போய்விட்டேன்.. கட்சியும், குடும்பமும் பிளவுபட்டு விட்டதே" என்று தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புலம்பி உள்ளார் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே.

    மகாராஷ்டிராவில் இன்றைய பொழுது இரு அரசியல் குடும்பங்களுக்கு இடையே பெரும் பிரிவினையை ஏற்படுத்தி விட்டது. பாஜகவுக்கு சாதகமாக விடிந்துள்ளது.. இதனால் நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்வினால், பரபரப்பும், சலசலப்பும் தொற்றி கொண்டுள்ளன. ஒரே இரவில் ஏற்பட்ட இந்த திருப்பம், சிவசேனாவை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    maharashtra govt: Supriya Sules says Party and family split

    ராத்திரி வரை கூடவே இருந்து.. ஆதரவு தெரிவித்துவிட்டு, பொழுதுவிடிந்ததும், சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சரத்பவார் சொல்லிவிட்டாலும், அவரது குடும்பத்தை இந்த முடிவு வெகுவாகவே பாதித்துள்ளது.

    2006ல் குமாரசாமி ஆடிய விளையாட்டு.. அஜீத் பவாரும் அதே ஆட்டம்.. கர்நாடகாவை மிஞ்சிய மகாராஷ்டிரா!2006ல் குமாரசாமி ஆடிய விளையாட்டு.. அஜீத் பவாரும் அதே ஆட்டம்.. கர்நாடகாவை மிஞ்சிய மகாராஷ்டிரா!

    குறிப்பாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, இந்த திடீர் நிகழ்வால் மிகவும் உடைந்து நொறுங்கி போய் விட்டார். கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டதாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அவரது வாட்ஸ்அப் தகவலில், "வாழ்க்கையில் யாரை நம்புவது? இப்படி நான் உணர்ந்ததே இல்லை. என் வாழ்க்கையில் மோசம் போய்விட்டேன். அவரை ரொம்பவும் பாதுகாத்தேன். நிறைய அன்பு செலுத்தினேன்.. ஆனால் அதற்கு திரும்ப என்ன கிடைத்தது" என்றும், "கட்சியும், குடும்பமும் பிளவுபட்டு விட்டது" என்றும் தன்னுடைய வாட்ஸ்அப்பில் குமுறி தெரிவித்துள்ளார்.

    ஒரே நாளில் இத்தனை குழப்பங்கள், அதிர்ச்சிகள், கண்டனங்கள் வெளியாகி கொண்டே இருப்பதால், தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி தொடருமா அல்லது நீடிக்குமா என்ற சந்தேகம் எழ தொடங்கி உள்ளது.

    English summary
    maharashtra govt: Sharad Pawar's daughter Supriya Sules says Party and family split
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X