பண மோசடி..தாவுத் இப்ராஹிமுடன் தொடர்பு? மகராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைதால் பரபரப்பு..உண்மை என்ன?
மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஆகவும் மகாராஷ்டிர மாநிலத்தின் சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் நவாப் மாலிக் இன்று அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ சமீபத்தில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுத்தது.
தாவுத் இம்ராஹிமின் உறவினர்கள், கூட்டளுக்குச் சொந்தமான இடங்கள், வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், தாவுத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர், சகோதரி ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரித்து.

திடீர் சோதனை
விசாரணையில் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ரியல் எஸ்டேட் போன்றவை மூலம் கிடைத்த பணம் தாவூத் இப்ராகிமுக்கு ஹவாலா முறையில் அனுப்பப்பட்ட எண்ணை கண்டுபிடித்து நிலையில் இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழக்கில் எதிர்பாராதவிதமாக இன்று காலை 6 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மை விவகார துறை அமைச்சர் நவாப் மாலிக் வீட்டில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

நவாப் மாலிக் கைது
வீட்டில் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் நவாப் மாலிக் இருந்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தில் பல ஏக்கர் நிலங்களை நவாப் மாலிக் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பெரும் பரபரப்பு
ஆனால் விசாரணையில் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. அமலாக்கத்துறை கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி மிரட்டுவதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டு வெளியே அழைத்து வரப்பட்ட நவாப் மாலிக் செய்தியாளர்களைப் பார்த்து நான் தலை வணங்க மாட்டேன் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம் அனைவரையும் அம்பலப்படுத்துவேன் என்று முழக்கமிட்டார்.

நீதிபதியிடம் புகார்
தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாகவும், விசாரணைக்கு முதலில் சம்மன் அனுப்பி இருக்க வேண்டுமானால் நடைமுறைகளைப் பின்பற்றாமல் என்னை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர் என நீதிபதி முன் நவாப் மாலிக் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications