மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்பிஐ ஏடிஎம்ல பணம் எடுக்க போறீங்களா? எல்லாம் மாறிபோச்சு - இனி பழைய மாதிரி முடியாது - இத படிங்க!

Google Oneindia Tamil News

மும்பை: ஏடிஎம்களில் நடைபெறும் முறைகேடுகள், கொள்ளைகளை தடுக்க பாரத ஸ்டேட் வங்கி ஓடிபி முறையை கட்டாயமாக்கி இருக்கிறது.

நாடு முழுவதும் ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து இருக்கும் நிலையில், அது சார்ந்த மோசடிகளும் பெருகி இருக்கின்றன.

இந்த நிலையில் சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஓடிபி முறையை அறிமுகம் செய்து உள்ளது.

மனைவி ஒன்றும் பணம் கொடுக்கும் ஏடிஎம் இல்லை.. கணவரிடம் இருந்து விவாகரத்து வழங்கிய கர்நாடக ஹைகோர்ட்! மனைவி ஒன்றும் பணம் கொடுக்கும் ஏடிஎம் இல்லை.. கணவரிடம் இருந்து விவாகரத்து வழங்கிய கர்நாடக ஹைகோர்ட்!

ரூ.10000க்கு அதிகமாக பணம் எடுக்க வேண்டுமா?

ரூ.10000க்கு அதிகமாக பணம் எடுக்க வேண்டுமா?

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.10,000 அல்லது அதற்கும் மேல் பணம் எடுக்க ஏடிஎம் பின் நம்பர் மட்டும் போதாது. ONE TIME PASSWORD எனப்படும் ஓடிபி எண்ணையும் பதிவு செய்வதை ஸ்டேட் வங்கி கட்டாயப்படுத்தி இருக்கிறது. வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும் குறுஞ்செய்தியில் இருக்கும் ஓடிபி எண்ணையும் ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்து பணத்தை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த ஓடிபி எண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்று பணத்தை எடுப்பது, பாஸ்வேர்டை அறிந்துகொண்டு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை தடுக்க முடியும் என்று ஸ்டேட் வங்கி நம்புகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்து இருக்கும் இந்த ஓடிபி முறை விரைவில் அனைத்து வங்கிகளிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இனி பணம் எடுப்பது எப்படி?

இனி பணம் எடுப்பது எப்படி?

பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், கணக்கில் இணைக்கப்பட்டு உள்ள சிம்கார்டு பொருத்தப்பட்ட செல்போனை வைத்திருப்பது அவசியம். வழக்கம்போல் டெபிட் கார்டை ஏடிஎம் எந்திரத்தில் செலுத்தி பின் நம்பரை குறிப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் எடுக்க விரும்பும் தொகை ரூ.10,000 க்கும் அதிகம் என்றால் உங்களிடம் ஓடிபி எண் கேட்கப்படும்.

ஓடிபி எண்

ஓடிபி எண்

அப்போது வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்போன் எண்ணுக்கு வங்கியிலிருந்து ஓடிபி எண் மெசேஜாக வரும். அந்த ஓடிபி எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் கேட்கும் திரையில் பதிவிட வேண்டும். அதன் பின்னர் உங்கள் கணக்கில் உள்ள ரூ.10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகைகளை எடுக்கலாம்.

English summary
SBI introducing OTP system for ATM money transaction above Rs.10,000 withdrawl: ஏடிஎம்களில் நடைபெறும் முறைகேடுகள், கொள்ளைகளை தடுக்க பாரத ஸ்டேட் வங்கி ஓடிபி முறையை கட்டாயமாக்கி இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X