• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'மத்திய அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்ய.. இது தான் ஒரே காரணம்..' பரபரப்பை கிளப்பிய சரத் பவார்

Google Oneindia Tamil News

மும்பை: மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசு ஏன் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து முக்கிய தகவலைத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்ட வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

முதலில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர்.

 விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

டிசம்பர் மாதம் நிலவிய கடும் குளிர் சமயத்திலும் சரி, மார்ச், ஏப்ரல் சமயத்தில் நிலவிய கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னரும் கூட போராட்டம் தொடர்ந்தது.

 வாபஸ் பெற்ற மத்திய அரசு

வாபஸ் பெற்ற மத்திய அரசு

பல மாதங்களாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த போதிலும், மத்திய அமைச்சர்களும் பலரும் விவசாய தலைவர்களும் வேளாண் சட்டம் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது எனத் தொடர்ந்து பேசி வந்தனர். இந்தச் சூழலில் குரு நானக் ஜெய்ந்தி அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், நாட்டு மக்களிடையே மன்னிப்பையும் அவர் கேட்டுக்கொண்டார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ""உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விரைவில் தேர்தல்கள் உள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர். கிராம மக்களும் கூட சட்டங்களுக்கு எதிராகவே இருந்துள்ளனர். இதனால் வாக்கு கேட்கச் செல்ல முடியாத நிலை இருக்கும் என்பதை உணர்ந்தே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு எந்தவொரு தேர்தலும் இல்லை என்ற சூழல் இருந்தால், மத்திய அரசு கண்டிப்பாக இந்த முடிவை எடுத்திருக்காது" என்றும் அவர் தெரிவித்தார்.

 அரசு கவிழுமா

அரசு கவிழுமா

அடுத்தாண்டில் மகாராஷ்டிராவில் புதிய அரசு பொறுப்பேற்கும் என அம்மாநில பாஜக பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மாகா கூட்டணி அரசை அமைத்த போது முதலில் 15 நாட்களில் இந்த அரசு கவிழும் என்றார்கள். பின்னர் ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதங்கள் என்று சொன்னார்கள். சந்திரகாந்த் பாட்டீலுக்கு அவருக்குப் பிடித்ததைக் கூறட்டும். ஆனால் இருப்பினும், இந்த அரசு முழுமையாகத் தனது ஐந்தாண்டுக் காலத்தை நிறைவு செய்யும். தேர்தலிலும் கூட எங்கள் கூட்டணியே மீண்டும் வென்று ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

 அதிகார துஷ்பிரயோகம்

அதிகார துஷ்பிரயோகம்

நான் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தேன். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6, 7 அமைச்சர்கள் மத்திய அமைப்புகளால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் மும்பை வரும் மம்தாவை நேரில் சந்திக்கவுள்ளேன். மத்திய அரசு தனது அமைப்புகளை வைத்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களைத் துன்புறுத்தி வருகின்றன. மகாராஷ்டிராவிலும் இப்போது அதுதான் நடக்கிறது. அவர்கள் விசாரணை நடத்துட்டும். இருப்பினும், அவர்களால் எதையும் நிரூபிக்க முடியாது. அதிகார துஷ்பிரயோகத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்" என்று அவர் கூறினார்.

English summary
Nationalist Congress Party (NCP) chief Sharad Pawar latest about the repeal of farm laws. BJP-led central government would not have decided to repeal the three contentious farm laws had there been no elections scheduled in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X