ஓடிடி தளங்களில் இருப்பது ஆபாச படம்..என் கணவர் தயாரித்தது கவர்ச்சி படம்.. ஷில்பா ஷெட்டி புது விளக்கம்
மும்பை: தனது கணவர் ஆபாசப் படங்களைத் தயாரிக்கவில்லை கவர்ச்சி படங்களையே தயாரித்தார் எனத் தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, அதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாகக் கைது செய்தனர்.
ஆபாச படங்களைத் தயாரித்து, அதைச் செயலிகள் மூலம் வெளியிட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவரை மும்பை போலீசார் இப்போது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ராஜ் குந்த்ரா
ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதை ஹாட்ஷாட்ஸ் என்ற செயலி மூலம் விநியோகம் செய்ததாக ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவிடம் தற்போது மும்பை போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

லாபத்தில் பங்கில்லை
இந்நிலையில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் நேற்று சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த செயலி மூலம் கிடைத்த வருவாயில் எந்தவொரு பங்கையும் தான் எடுத்துக் கொள்ளவில்லை என்று ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், ஹாட்ஷாட்ஸ் செயலியில் என்ன மாதிரியான வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Array
மற்ற ஒடிடி தளங்களில் வரும் படங்களும், வெப் சீரிஸ்களும் மிகவும் ஆபாசமான காட்சிகளைக் கொண்டுள்ளதாகவும் ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார், மேலும், தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச திரைப்படங்களைத் தயாரிக்கவில்லை என்றும் அவர் கவர்ச்சி படங்களையே தயாரித்தார் என்றும் கூறியுள்ளார். ஆபாசப் படங்களுக்கும் கவர்ச்சி படங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அவர் விளக்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மும்பை போலீசார்
முன்னதாக ராஜ் குந்த்ரா கைது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், "வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகப் புதுமுக நடிகைகளிடம் கூறி, அதற்கான ஆடிஷன் எனக் கூறி இதுபோன்ற காட்சிகளில் நடிக்கச் சொல்லி படமாக்கியுள்ளனர். அவர்களை நிர்வாணமாகக் கூட படமாக்கியுள்ளனர். அவர்களில் சிலர் இது தொடர்பாக குற்றப்பிரிவில் புகார் அளித்தனர், அதன் அடிப்படையிலேயே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ் குந்த்ரா குற்றவாளி என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications