• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லீக்" ஆன மகன் போட்டோ.. யார்னு தெரியுதா.. பக்கத்துல பார்த்தீங்களா.. "சூப்பர் சி எம்".. பாஜக கப்சிப்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அவரது மகன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதையடுத்து, எதிர்க்கட்சியினர் பலரும் இந்த போட்டோவை விமர்சித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவிலிருந்து 39 அதிருப்தி எம்எல்ஏக்களுடன், பாஜகவுக்கு ஆதரவை வழங்கினார் ஏக்நாத் ஷிண்டே.. இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

ஏக்நாத் ஷிண்டேவுடன் பாஜக கரம்கோர்த்து, மகாராஷ்டிராவை ஆட்சிபுரிந்து வருகிறார்கள்.. ஏக்நாத் முதல்வராகவும, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியை அலங்கரித்து வருகின்றனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன தமிழக அரசு.. 3% உயர்வு.. 2 மாத நிலுவைத்தொகை உடனே! மின்வாரிய ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன தமிழக அரசு.. 3% உயர்வு.. 2 மாத நிலுவைத்தொகை உடனே!

 சேர் + ஷிண்டே

சேர் + ஷிண்டே

இந்நிலையில்தான், ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில், அவரது மகன் ஸ்ரீகாந்த் உட்கார்ந்திருக்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளறிவிட்டுள்ளது.. அந்த சேரில் உட்கார்ந்து ஸ்ரீகாந்த் செல்போனில் விளையாடி கொண்டிருக்கிறார்.. அப்போது ஏக்நாத் ஷிண்டே அங்கு இல்லை என்றும் தெரிகிறது.. இந்த போட்டோ சோஷியல் மீடியாவிலும் கசிந்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றன..

 தானே வீடு

தானே வீடு

ஆனால், தன் மீதான இந்த குற்றச்சாட்டை ஸ்ரீகாந்த் மறுத்துள்ளார்.. தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் வேலை இது என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.. அதுமட்டுமல்ல, "அது தானேவில் உள்ள எங்கள் வீடு.. அங்கே எடுக்கப்பட்ட போட்டோ இது.. அங்கு நானும் என்னுடைய அப்பாவும், பல வருடங்களாகவே மக்கள் பிரச்சினைகளை கேட்டு வருகிறோம்,.. அதனால், அந்த போட்டோவில் உள்ள இடம் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமோ, அல்லது அவரது அரசு அலுவலகமோ இல்லை.

புரோட்டோகால்

புரோட்டோகால்

நான் 2 முறை எம்பி ஆக இருந்திருக்கிறேன். புரோட்டாகால், நெறிமுறைகள் எனக்கும் தெரியும்.. இன்று முதல்வர் ஒரு வீடியோ கான்பிரன்ஸ் நடத்தினார்.. அங்குள்ள மேஜையில் மகாராஷ்டிர முதல்வர் என்று கொடி வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால், அதை நான் கவனிக்கவில்லை.. அதற்குள் யாரோ அதை போட்டோவை எடுத்து ஷேர் செய்து என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர் என்று விளக்கம் தந்துள்ளார்.

 சூப்பர் முதல்வர்

சூப்பர் முதல்வர்

ஆனாலும், ஆயிரம் இருந்தாலும் முதல்வர் நாற்காலிக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது, அதற்கு ஸ்ரீகாந்த் மதிப்பளிக்க வேண்டும் என்று சிவசேனா, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன... குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் ரவி வார்பே இந்த போட்டோ குறித்து கிண்டல் அடித்துள்ளார்.. சூப்பர் முதல்வர் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துக்கள்.. முதல்வர் இல்லாத நிலையில் அவரது மகன் முதல்வர் பதவியில் உள்ளாரே.. இது என்னமாதிரியான ராஜ தர்மம்? என்று கேட்டுள்ளார்..

 பிஸி சிஎம்

பிஸி சிஎம்


அதேபோல, சிவசேனா எம்எலசி செய்தி தொடர்பாளர் மனிஷா கயண்டே, ஏக்நாத் ஷிண்டே கணபதி நாடாளுமன்ற தொகுதியில் பிஸியாக இருக்கிறார், அதனால்தான், அவரது மகனிடம் முதல்வர் நாற்காலியை ஒப்படைத்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.. இப்படி இணையத்தில் கமெண்ட்கள் விறுவிறுப்பாக பதிவாகி, மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 மொபைல் சி.எம்

மொபைல் சி.எம்

இப்படித்தான் ஒருமுறை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, ஸ்ரீகாந்த் ஷிண்டே கிண்டலடித்திருந்தார்.. "என்னுடைய அப்பா ஷிண்டே ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை வேலை செய்கிறார்.. அவர் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் முதல்வர் கிடையாது.. எப்பவுமே நடமாடுகின்ற முதல்வர்.. ஆனால், கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது, உத்தவ் தாக்கரே வீட்டை விட்டு வெளியில்கூட வரவில்லையே" என்று விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

English summary
Super and Why does opposition slam CM Eknath shindes son Srikanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X