எல்லோரா குகைக்குள் என்ன நடக்கிறது.. புது புது மாற்றங்கள்.. முதல் நினைவுச் சின்னமாக மாறுகிறதா?
எல்லோரா குகைக்குள் புதுப்புது மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
மும்பை: யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள், விரைவில் ஹைட்ராலிக் லிப்ட் கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னமாக மாறும் என்று பூரித்து சொல்கிறார்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள்.
அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளால் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் மலைச்சரிவு பாறைகளில் வியக்க வைக்கும்.
உலகப் புகழ் பெற்ற அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் இருக்கின்றன..
இங்கு ஏராளமான பழம்பெரும் குகை சிற்பங்கள், பாறை ஓவியங்கள் நிறைந்துள்ளன. பல்வேறு கலை அம்சங்கள் நிறைந்த அஜந்தா குகைகள், யுனெஸ்கோ நினைவு சின்னங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது.. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அஜந்தா குகைகள் பற்றின ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது..

தண்ணீர் வர
இந்த குகைகள் இன்றுவரை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாலும், மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்து குகைகளை தற்போது முற்றிலுமாக மறைத்துவிட்டன... அஜந்தா குகைகளுக்குள் தண்ணீர் வரவில்லை என்ற புகார்கள் வெடித்தன.. நிலுவைத் தொகை செலுத்தாததன் காரணமாக 2 வருடங்களாகவே இங்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.. எப்போதுமே மகாராஷ்டிராவின் ஜீவன் பிரதிகாரன் என்ற அமைப்புதான் இங்குள்ள குகைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறது..

ஒரே கல் சிற்பம்
மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை ரூ.3.2 கோடி பணம் பாக்கி வைத்திருப்பதால், தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.. இந்நிலையில், எல்லோரா குகைகள் பற்றின மகிழ்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.. உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டதுதான் எல்லோரா.... அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதே இதன் முக்கிய சிறப்பம்சம்.. மகாராஷ்டிராவில் மட்டும் பல்வேறு அளவில் சுமார் 1200 குகைகள் உள்ளன.

பவுத்தம்
இதில் 900 குகைகள் பவுத்த மதம் சார்ந்தவை என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். 500 மீட்டர் நீளமுள்ள எல்லோரா குகைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக மாற்ற தொல்பொருள் ஆய்வுத் துறை பல திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.. அவுரங்காபாத் வட்டத்தின் கண்காணிப்பாளர் மிலன் குமார் இதை பற்றி சொன்னதாவது:

கைலாஷ் குகை
"இந்த வளாகத்தில் உள்ள 34 குகைகளில், குகை எண் 16, "கைலாஷ் குகை" என்று சொல்வார்கள்.. இது ஒரு இரட்டை மாடி அமைப்பாகும்.. சுற்றுலாப் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி, வளைவில் சென்றால்தான், அதன் அழகை ரசிக்க முடியும்.. இந்த மேல்பகுதிக்கு செல்ல, ஏற்கனவே படிக்கட்டுகள், இருந்தாலும், சிறிய லிஃப்ட்களை நிறுவ தொல்லியல் துறை திட்டமிட்டு வருகிறது..

ஸ்பெஷல் நடவடிக்கை
9 சதுர அடி பரப்பளவில் இந்த லிப்ட்டுகள் இருக்கும்.. ஆனால், ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் இந்த லிப்ட்டில், சக்கர நாற்காலியில் ஒருவர் முதல் தளத்திற்கு எளிதாக செல்ல முடியும்.. மலைகளால் சூழப்பட்ட ஒற்றை கட்டிடமான கைலாஷ் கோவிலை, சுற்றுலா பயணிகள் அந்த மலை உச்சியில் இருந்து முழுமையாக கண்டுகளிக்க முடியும்.. அதற்காக மேல் மலையில், பிரத்யேகமாக பாதை அமைக்கப்படும்.. சில ஓவியங்களுக்கு விளக்குகளை நிறுவவும், சில பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

முதல் நினைவுசின்னம்
இதைதவிர, எல்லோராவில் டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், செல்ஃபிகளுக்கு ஏற்ற இடங்களோடு இயற்கையை ரசிக்க செய்யவும் திட்டமிட்டுள்ளோம்... குகை வளாகத்தில் மின்சார வாகன சேவையும் அடுத்த மாதம் தொடங்க போகிறது" என்றார்.. இந்த பணிகள் மட்டும் நிறைவேறினால், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள், ஹைட்ராலிக் லிப்ட் கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னமாக மாறும் என்று பூரித்து சொல்கிறார்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications