மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிக்கு விருது: சொந்த கிராமத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி. ரஜினிக்காக ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்

Google Oneindia Tamil News

மும்பை: ரஜினிக்கு 'தாதாசாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டதால், அவரின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அருகிலுள்ள மாவாடி கட்டேபதர் கிராம மக்கள் எலையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குட் ஃப்ரைடே - உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுஷ்டிப்பு - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு குட் ஃப்ரைடே - உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுஷ்டிப்பு - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

''ரஜினி தங்கள் கிராமத்துக்கு வருகை தர வேண்டும் என்று'' அந்த கிராம மக்கள் முகத்தில் புன்னகை மலர கேட்டுக் கொண்டனர்.

ரஜினிக்கு 'தாதாசாகேப் பால்கே விருது

ரஜினிக்கு 'தாதாசாகேப் பால்கே விருது

'இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் திரையுலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான நடிகர் ரஜினிகாந்துக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே' விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்துள்ளனர். ரஜினிக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி

சொந்த கிராம மக்கள் மகிழ்ச்சி

வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை தமிழக மக்கள், ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் ரஜினிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ரஜினிக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டதால் அவரின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு அருகிலுள்ள மாவாடி கட்டேபதர் கிராம மக்கள் எலையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினி உங்களிடம் உறுதியளித்தார்

ரஜினி உங்களிடம் உறுதியளித்தார்

ரஜினிக்கு விருது அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ள கிராம மக்கள், தங்கள் கிராமத்துக்கு ரஜினி வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்கள். இது தொடர்பாக அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் புன்னகை மலர கூறுகையில், ' சில ஆண்டுகளுக்கு முன்பு லோனாவாலாவில் படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த் இந்த கிராமத்துக்கு வருவதாக எங்களிடம் உறுதியளித்தார். படப்பிடிப்பின் போது அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

எப்போதும் எங்களுக்கு சிவாஜி கெய்க்வாட்தான்

எப்போதும் எங்களுக்கு சிவாஜி கெய்க்வாட்தான்

பின்னர் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று எங்களை இந்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அனால் ரஜினி எங்களை மராத்தியில் பேசச் சொன்னார். அவர் சரளமாக மராத்தி பேசுவதை பார்த்து நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம்' என்று கூறினார். மாவாடி கட்டேபதர் கிராமத்தில் இருக்கும் விஜய் கோல்டே என்பவர் கூறுகையில், ' ரஜினிகாந்த் ஒருநாள் எங்கள் கிராமத்திற்கு வந்து கிராமவாசிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எப்போதும் எங்களுக்கு சிவாஜி கெய்க்வாட்தான் என்று மகிழ்வுடன் கூறினார் விஜய் கோல்டே. கிராம மக்கள் விரும்பியபடி ரஜினிகாந்த் தனது சொந்த கிராமத்துக்கு செல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

English summary
With the announcement of the 'Dadasaheb Phalke' award to Rajini, the people of Mawadi Kattepadar village near Pune, his hometown in Maharashtra, are overjoyed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X