அதிர்ச்சி! அவசரத்துக்கு ஒதுங்கிய கணவன்! மனைவியுடன் சீறிய மினி பஸ்! இருட்டில் மிருகமாய் மாறிய போங்கு!
மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சி தரும் விதமாக மினி பேருந்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அதிகளவில் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கி வருகின்றனர்.

புனேவில் அதிர்ச்சி
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மினி பேருந்தில் வைத்து இளம்பெண் ஒருவர் அந்தப் பேருந்தில் உரிமையாளரை மிரட்டி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் புனேவில் லக்ஷ்மிநாராயண் தியேட்டர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வாகனத்திற்குள் 21 வயது பெண்ணைக் கடத்தி, மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் மினி பேருந்தின் ஓட்டுநர் தான் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரைச் சேர்ந்த டிரைவர் நவ்நாத் போங், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணையும் அவரது கணவரையும் தனது வாகனத்தில் தூங்க அனுமதித்துள்ளார். கணவர் அருகில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, போங் அந்த பெண்ணுடன் மினி பேருந்தை ஓட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் அவரது கணவரும் வாழ்வாதாரம் தேடி இரண்டு நாட்களுக்கு முன்பு புனே வந்துள்ளனர். அவர்களுக்கு கட்ராஜில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை கிடைத்தது.

பெண் கடத்தல்
வேலை முடிந்ததும். சனிக்கிழமை இரவு, தம்பதியினர் இரவைக் கழிக்க தங்குமிடம் தேடிக்கொண்டு ஸ்வர்கேட் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றனர். பேருந்து நிலையம் அருகே தனது வாகனத்தை நிறுத்திய போங், பேருந்து நிலையத்திற்குச் செல்லாமல் தனது வாகனத்தில் தூங்குமாறு தம்பதியரைக் கூறியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் பெண்ணின் கணவர் எழுந்து கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார். போங் அவரை ஸ்வர்கேட் எஸ்டி ஸ்டாண்டின் வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறைக்கு அழைத்துச் சென்றார்.

போலீசார் விசாரணை
பின்னர் போங் மினி பஸ்ஸுக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுடன் அதனை மறைவான இடத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அதற்குள் அந்த பெண் விழித்துக் கொண்ட நிலையில், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அப்பெண்ணை அச்சுறுத்தி, அந்த இடத்திலேயே இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதற்கிடையே தனது மனைவி தேடி வந்த பெண்ணின் கணவர் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, அவர் தனது மனைவியைக் கண்டுபிடித்ததோடு, தனது மனைவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்டதோடு, மினி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications