Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க மட்டும் தான் ப்ரீ போட்டோஷூட் பண்ணுவீங்களா..நாங்களும் எடுப்போம்ல.. காட்டுக்குள் ஒரு காதல்கதை..!

Subscribe to Oneindia Tamil

மும்பை : திருமணத்திற்கு முன்பு போட்டோ ஷூட் எடுக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் காட்டுக்குள் காதல் பறவைகள் ஆகிய ஆந்தைகளின் போட்டோ ஷூட் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எனப்படும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் நிகழ்வுகள் தற்போது ஒரு ஃபேஷனாகவே வளர்ந்து வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சுற்றுலாத்தலங்களில் எடுப்பது போய் தற்போது காட்டுக்குள்ளே, தண்ணீருக்குள்ளே என சிக்கல்களில் சிக்க வைக்கும் எல்லை மீறும் போட்டோ ஷூட் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 வெட்டிங் போட்டோ ஷூட்

வெட்டிங் போட்டோ ஷூட்

அரை நிர்வாண போட்டோ ஷூட், நிர்வாண போட்டோ ஷூட் என தற்போது போட்டோ ஷூட் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன். இந்த உலகத்தில் காதல் ஒன்று தான் அழகான விஷயம். காதல் பறவைகள் என்றாலே கிளி மைனா உள்ளிட்ட பறவையினங்களை தான் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆந்தைகளின் காதல்

ஆந்தைகளின் காதல்

ஆந்தைகளுக்கும் காதல் வரும் அந்த ஆந்தைகளின் அபிமான கிளிக்குகள்தான் இப்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. மகாராஷ்டிராவின் பாந்த்ரா பகுதியில் வனப்பகுதியில் புகைப்படக் கலைஞரான அஸ்வின் கென்கரே புகைப்படம் எடுக்கச் சென்றபோது அங்கே இரண்டு ஆந்தைகள் அழகாக கொஞ்சிக் கொண்டிருந்தன. சட்டென பல க்ளிக்குகளை எடுத்து குவித்த அஸ்வின் இதனை வனத்துறை அதிகாரியான மதுமிதாவுக்கு பகிர்ந்தார்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட் என்று நான் நினைக்கிறேன் என மதுமிதா IFS பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது ஏராளமானோர் பகிரப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் பலர் அதற்கு பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கல்யாணத்துக்கு முன்னாடி அப்படித்தான் இருக்கும் அதுக்கு அப்புறம் பாருங்க என கலாய்க்கும் வகையிலும் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தற்போது அந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 காலாய்க்கும் கமெண்ட்டுகள்

காலாய்க்கும் கமெண்ட்டுகள்

எல்லாம் சரி கல்யாணத்துக்கு முன்னாடி ஆந்தை ஜாலியாத்தான் இருக்கும் ஆனா அதுக்கு அப்பறம் என்ன நடக்கும்னு தெரியுமா? என தாங்கள் எடுத்த ஆந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் சில பறவைகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் கல்யாணத்துக்கு முன்.. கல்யாணத்துக்கு பின் என கமெண்ட்டுகள் மூலம் கலாய்த்து வருகின்றனர். ஆனால் கலாய்ப்பதாக இருந்தாலும் அவர்கள் பதிவிட்டுள்ள புகைப்படங்களும் அருமையாகத்தான் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+