மண் அள்ளும்போது 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்... 2 பெண்கள் பலி... நாமக்கல்லில் பரிதாபம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே, மணல் அள்ளி வந்த டிராக்டர், 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த 2 பெண் தொழிலாளிகள்பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகேயுள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் என்பவர், தனக்குச் சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடைபெற்று வந்தது.

மணல் அள்ளும் பணியில் பெண்கள்
விஜயராகவன் தோட்டத்தில் மணல் அள்ளும் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரும், நடுப்பட்டியை சேர்ந்த செல்வி என்பவரும் ஈடுபட்டனர். மேலும், மண் அள்ளும் பணியில் டிராக்டர் ஒட்டுநர் சுப்ரமணியும் ஈடுபட்டிருந்தார்.

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்
டிராக்டர் ஓட்டுனர் சுப்பிரமணி, மண்ணை அள்ளிக்கொண்டு சுமார் 30 அடி பள்ளத்தில் இருந்து மேலே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பின்புறமாக திடீரென கவிழ்ந்து விழுந்து விழுந்தது. இந்த விபத்தில், டிராக்டரில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களும் பள்ளத்தில் விழுந்தனர். இதில் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் டிராக்டரில் இருந்த மண்ணும் அந்த பெண்கள் மீது கொட்டியதால், அவர்கள் மண்ணில் புதைந்தனர்.

இரு பெண்களும் உயிரிழப்பு
இந்த விபத்தில், கவிதா என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மீட்டு, உடனே மருத்துவமனை கொண்டு சென்றனர். எனினும், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டுனர் சுப்பிரமணி, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஓட்டுனரின் அஜாக்கிரதை
டிராக்டரில் சுமார் 30 அடி பள்ளத்தில் மண்ணை அள்ளிக்கொண்டு மேலே வந்த சுப்பிரமணி, பெண் தொழிலாளர்கள் இருவரையும் டிராக்டர் மேலே அமர வைத்தபடியே டிராக்டரை இயக்கியுள்ளார். மேடு ஏறும் போது டிராக்டர் திடீரென பக்கவாட்டில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. டிராக்டர் ஓட்டுநர் சுப்பிரமணியின் கவனக்குரைறவே இந்த விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அவரின் இந்த அஜாக்கிரதையால், அப்பாவி பெண் கூலித்தொழிலாளிகள் இறந்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications