நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் உயிர் பிழைத்த சிறுவன்.. அக்கறையோடு நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

நாமக்கல் : இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்ட நிதி உதவி மூலம் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிர்பிழைத்த சிறுவன் வர்ஷாந்துடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.

Recommended Video

    நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் உயிர் பிழைத்த சிறுவன்.. அக்கறையோடு நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

    சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில் நம்மை காக்கும் 48' சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த திட்டத்திற்காக 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தை மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

    விஷம பிரச்சாரம்: 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன? விஷம பிரச்சாரம்: 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன?

    விபத்தில் சிக்கிய சிறுவன்

    விபத்தில் சிக்கிய சிறுவன்

    இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடிய இன்னுயிர்கள் இந்த திட்டத்தின் மூலம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த 13 வயது சிறுவனான செல்வன் வர்ஷாந்த் என்பவர் கடந்த 13.1.2022 அன்று இரவு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த அடிபட்டது தெரியவந்ததையடுத்து சி.டி ஸ்கேன் பரிசோதனையில் வலது முன் மூளையிலும், வலது காது புற பகுதியில் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அவசர சிகிச்சை

    அவசர சிகிச்சை

    ICUவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 12 மணி நேரம் கழித்து மூளையில் இரத்த கசிவு அதே அளவில் உள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதற்காக மீண்டும் CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட போது, இரத்த கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நியூரோ சர்ஜன் மருத்துவர்.பாலசுப்பிரமணியன் அவர்கள் மண்டை ஓட்டை திறந்து, அறுவை சிகிச்சை செய்தார். இரத்த கசிவு அகற்றப்பட்ட நிலையில், தற்போது செல்வன் வர்ஷாந்த் தெளிவாக நல்ல நிலையில் உள்ளார்.

    நன்றி கூறிய மருத்துவர்

    நன்றி கூறிய மருத்துவர்

    இந்நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் - மிகப் பெரிய நன்மை பயக்கும் எனவும், மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் அனுமதி அளித்து திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி என்று சிகிச்சை அளித்த மருத்துவர் S.T.ஷியாம்சுந்தர் அவர்கள் தெரிவித்திருந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அனைவராலும் வேகமாக பகிரப்பட்டது.

    நலம் விசாரித்த முதல்வர்

    நலம் விசாரித்த முதல்வர்

    இந்நிலையில் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48" திட்ட நிதி உதவி மூலம், தலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு நலமோடு வீடு திரும்பிய சிறுவன் வர்ஷாந்துடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். அந்த சிறுவனுக்கு வலி இருக்கிறதா, மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளவேண்டும் என அக்கறையுடன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், சிறுவனின் தயாரிடமும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததோடு, ஏதாவது உதவி தேவை என்றால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கூறினார். முதல்வரின் இந்த உதவி மற்றும் தங்களிடம் விசாரித்ததற்கு மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சிறுவனின் தாயார் கண்ணீர் மல்க கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

    English summary
    Chief Minister Stalin spoke on the phone with Varshanth, a boy who had undergone head surgery with the financial assistance of the Tamil Nadu government and inquired about his health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X