கடன் தொல்லை.. நாமக்கல்லில் தறிதொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை.. இரு குழந்தைகள் உயிருக்கு போராட்டம்
நாமக்கல்: கடன் தொல்லையால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தறித்தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). தறித்தொழிலாளியான இவரது மனைவி மேனகா (38). இவர்களுக்கு பூஜா (14), நவீன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
தனது தொழில் விருத்திக்காக சுப்பிரமணி ஏராளமான கடன்களை வாங்கியதாக தெரிகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் வேலை முடங்கியதால் குடும்பம் நடத்த முடியாமல் சுப்பிரமணியன் அவதிப்பட்டு வந்தார்.
மகனை கொன்றதால் பழிக்குப்பழியாக தலை துண்டித்து ரவுடி கொலை.. தந்தை வாக்குமூலம்

தற்கொலை
இதனிடையே பணம் கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டு வாசலில் நின்று அசிங்கமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள சுப்பிரமணி முடிவு செய்தார்.

மருத்துவமனையில் அனுமதி
அதன்படி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தம்பதி, தாங்களும் அதை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் சுப்பிரமணியனும், மேனகாவும் உயிரிழந்துவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பூஜாவும், நவீனும் மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விசாரணை
கடன் தொல்லையால் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக ஏழைத் தொழிலாளிகள் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில் எப்பவோ கொடுத்த கடனை கேட்டு அவர்களை நெருக்குவதால் வாழ வழியின்றி தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள்.

தற்கொலை
இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். கொரோனாவால் உலக பொருளாதாரமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சாதாரண தொழில் செய்யும் நாம் எல்லாம் எம்மாத்திரம்? மக்களும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் போலீஸாரிடமோ அரசிடமோ முறையிட வேண்டுமே தவிர இது போல் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். வாழ்க்கையில் எதிர்நீச்சல் என்பது அவசியம். இந்த சின்ன விஷயத்திற்காக உயிரை மாய்த்து கொள்வது முட்டாள்தனம்.