ஜஸ்ட் மிஸ்.. கொஞ்சம் விட்டிருந்தால் முடிஞ்சிருக்கும்.. அமெரிக்காவில் பீதியை கிளப்பிய "டெல்டா" விமானம்
நியூயார்க்: அமெரிக்காவில் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த விமானம் கடந்த 29ம் தேதி அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வந்து சேர்ந்த போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இது தொடர்பான காட்சிகளை உள்ளூர் செய்தி ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பியுள்ளன. ஒரு வேலை விபத்து நடந்திருந்தால் விமானத்தில் பயணித்திருந்தவர்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்டா விமானம்
N306DN என பெயர் கொண்ட இந்த விமானம் நவம்பர் 29ம் தேதியன்று காலை 9.45 மணிக்கு டெட்ராய்டிலிருந்து புறப்பட்டது. பின்னர் இது இரண்டு மணி நேரம் கழித்து 11.35க்கு லாஸ் ஏஞ்சல்சில் தரை இறங்கியது. அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது பொதுவாக விமானங்கள் தரையிறங்கும்போது பின்னாள் உள்ள இரண்டு சக்கரங்கள்தான் முதலில் தரையில் இறங்கும். இதனையடுத்துதான் முதலில் உள்ள ஒரு சக்கரம் தரையில் பதியும். ஏனெனில் விமானத்தின் மொத்த எடையும் தரையிறங்கும் நேரத்தில் அதிகரிக்கும். இவ்வளவு எடையை முதலில் உள்ள ஒற்றை சக்கரத்தால் தாங்க முடியாது. எனவே பின்னாள் இருக்கும் இரண்டு சக்கரங்கள் இந்த எடையை முழுமையாக தாங்கிக்கொள்ளும். இதுதான் விமானம் தரையிறக்கும் முறை.

விபத்து தவிர்ப்பு
ஆனால் 29ம் தேதி தரையிறங்கிய டெல்டா விமானமானது சரியாகதான் வழிமுறைகளை கையாண்டது. முதலில் பின்னாள் இருந்த இரண்டு சங்கரங்கள் தரையில் பதிந்தன. ஆனால் முன் சக்கரம் கீழ் இறங்காமல் திடீரென மேலே உயர்ந்தது. இதனால் விமானத்தின் மொத்த எடையும் பின்பக்கத்தில் குவிக்கப்பட்டு விமானம் தலைக்குப்புற கவிழ நேர்ந்தது. ஆனால் உடனடியாக விமானி சாதூர்யமாக செயல்பட்டு இதனை தவிர்த்துவிட்டார். இதனை 'Tail Strike' என்று அழைப்பார்கள். இந்த Tail Strike விபத்துக்கள் விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் ஏற்படும். முதன் முதலாக விமானத்தில் மக்கள் பயணிக்க தொடங்கியபோது இம்மாதிரியான விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் அதிகரித்தது. பின்னாட்களில் இதனை தவிர்க்க விமானத்தில் வால் பகுதிக்கு கீழே இரண்டு சென்சார்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் Tail Strike விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

மிகப்பெரும் விபத்து
தற்போது டெல்டா விமானத்திலும் இந்த சென்சார்கள் காரணமாகதான் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. 1977ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்துதான் இது வரை நடந்த விமான விபத்துக்களில் மிகவும் மோசமானதாகும். ஸ்பெயினுக்கு சொந்தமான Los Rodeos தீவில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது இந்த விமான நிலையத்தில் ஒரேயொரு குறுகலான ரன்வேதான் இருந்திருக்கிறது. இந்த ரன்வேயில் பறப்பதற்கு தயார் நிலையில் ஒரு விமானம் இருந்திருக்கிறது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் பெறப்பட்டு உரிய அனுமதியுடன் விமானம் ரன்வேயில் ஓட தொடங்கியுள்ளது. இது போயிங் 747 ரக விமானமாகும். இந்த வகை விமானங்கள் டேக் ஆஃப் ஆக மணிக்கு 184 கி.மீ வேகத்தை எட்ட வேண்டும்.

உயிரிழப்பு
சம்பவம் நடந்த நாளில் Los Rodeos விமான நிலைய ரன்வேயில் இந்த விமானம் தனது முழு வேகத்தை எட்டியுள்ளது. பறப்பதற்கு இன்னும் ஒரு சில நொடிகள்தான் பாக்கி. இப்படி இருக்கையில், திடீரென குறுக்கே மற்றொரு போயிங் 747 விமானம் வந்திருக்கிறது. இதை எதிர்பார்க்காத இரண்டு விமான பயணிகளும் சுதாரிப்பதற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய இரண்டு விமானத்திலும் பயணிகள் இருந்துள்ளனர். விபத்தில் மொத்தமாக 583 பேர் உயிரிழந்தனர். 61 பேர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்திற்கு அடுத்து உலகம் முழுவதும் விமான போக்குவரத்தில் புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவானதுதான் Tail Strike சென்சார் கருவியும்.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications