பதற்றம் உச்சத்தில் இருக்கு.. போர் மட்டும் வேண்டாம்.. இந்தியா - பாகிஸ்தானுக்கு ஐநா சொன்ன அட்வைஸ்
நியூயார்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான இந்த விவகாரம் ஐநா வரை சென்றுள்ளது. இந்நிலையில் தான் ‛‛இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை உச்சத்தில் உள்ளது. இந்த பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை என்பது தீர்வாக அமையாது. யாரும் தப்பு செய்ய வேண்டாம். இருநாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு எனது அலுவலகத்தை கூட தயாராக இருக்கிறேன்'' என்று ஐநா சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. முப்படைகளும் போர் பயிற்சியை தொடங்கி உள்ளன. அதேபோல் போர் கால ஒத்திகை நடவடிக்கையை நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் இன்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு, நம் நாடு நிச்சயம் பலமான பதிலடி கொடுக்கும் என்பதும், இது போராக கூட மாறினாலும் மக்கள் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டின் பதிலடி தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் ஐநா சபைக்கு ஓடியுள்ளது.
அதாவது இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் பற்றி ஐநா மன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல் தேவைப்பட்டால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த விஷயத்தை தேவைப்பட்டால் கையில் எடுக்கும் என்று அறிவித்து இருந்தது. இதையடுத்து
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை செய்ய உள்ளது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து ஐநாவின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இந்த பதற்றம் என்பது உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளின் அமைதிக்காகவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றம் என்பது வேதனை அளிக்கிறது. இப்போது அதிகபட்ச நிதானத்தில் இருந்து பின்வாங்கும் நேரத்தை இருநாடுகளும் கடைப்பிடிக்கின்றன.இருநாடுகளுடன் நான் தொடர்ந்து பேசியதில் கிடைத்த பதில் தான் இது.
பஹல்காம் தாக்குதலை நான் மீண்டும் ஒருமுறை வன்மையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் ராணுவ மோதலை தவிர்ப்பது அவசியம். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறேன். இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையை வளர்ப்பது, பதற்றங்களை குறைப்பது, அமைதிக்கான தீர்வை அடைவதற்கான எந்த முயற்சியையும் ஆதரிக்க ஐநா தயாராக உள்ளது.
யாரும் தவறு செய்யக்கூடாது. பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை என்பது தீர்வு இல்லை. அமைதி பேச்சுவார்த்தைக்காக நான் எனது அலுவலகத்தை இருநாடுகளின் அரசுகளுக்கும் தருகிறேன்'' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தயா - பாகிஸ்தான் மோதல் தொடர்பாக இன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை செய்ய உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில்லை எடுத்து கொண்டால் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவர்களில் ஐந்து பேர் நிரந்தர உறுப்பினர்கள்களாக உள்ளன. அதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவை அடங்கும். மற்றவர்கள் தற்காலிக உறுப்பினர்கள். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications