ஆபரேஷன் நிலா! செப்டம்பர் 3ல் விண்ணில் பாயும் ஆர்டெமிஸ் ராக்கெட்! திட்டத்திற்கே மூளையான இந்தியா
நியூயார்க்: மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தின் ஒரு பகுதியாக 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது. மூன்று பகுதிகளை கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் பயணம் செப்டம்பர் 3ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை இந்த பயணத்தை தொடங்க இருந்த நிலையில் தொழில்நுடப கோளாறு காரணமாக பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்த 'ஆர்டெமிஸ்' திட்டத்தில் இந்தியாவுக்கான பங்கு என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த திட்டம் குறித்தும், இந்தியாவின் பங்கு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மனிதனுக்கும் நிலவுக்குமான தொடர்பு
மனிதனுக்கும் நிலவுக்குமான தொடர்பு என்பது மனித இனம் உருவான காலத்திலிருந்தே நீடித்து வருகிறது. அதாவது மனித இனத்தின் வயது தோராயமாக 3 லட்சம் வருடங்களாகும். அதேபோல மனிதனுக்கும் நிலவுக்கும் இடையேயான தொடர்பின் வயதும் 3 லட்சம் வருடங்களாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏனெனில், ஆதி மனிதன் நிலவை புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவனுடைய வாழ்விட எச்சங்களிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3 லட்சம் ஆண்டுகளின் கனவு
இந்த 3 லட்சம் ஆண்டுகளின் தீரா தாகம் எதிர்வரும் 2025ம் ஆண்டுகளில் சாத்தியமாகும் என நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாசாவின் அப்பல்லோ திட்டம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் தொடக்கி வைத்த இந்த பயணத்தின் தொடர்ச்சியாக தற்போது வரை 12 பேர் நிலவுக்கு சென்று திரும்பியிருக்கிறார்கள். இந்த பயணத்தை 1972ல் அமெரிக்கா முடித்துக்கொண்டது. ஆனால் இந்த பயணங்கள் எல்லாமோ குறைந்த நேரத்தில் நிலவிலிருந்து மனிதர்கள் திரும்பிவிடுவதை போல வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 'ஆர்டெமிஸ்' திட்டம், நீண்ட காலத்திற்கு நிலவில் தங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறது.

50 ஆண்டுக்கால இடைவெளி
1969-1972 வரை மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா. ஆனால் இதனையடுத்து தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது. தற்போதும் இந்த 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் மூலம் இந்த 50 ஆண்டு இடைவெளி ஒரு வழியாக முடிவுக்கு வர இருக்கிறது. 'ஆர்ட்டெமிஸ்' எனப்படும் இந்த திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரை இறங்குவதற்கு சரியான இடத்தை நாசா கண்டுபிடித்து அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையில், ஒவ்வொரு பிராந்தியத்திலும், பல தரையிறங்கும் தளங்கள் உள்ளன என நாசா கூறியுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகள் அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இடைநின்ற பயணம்
இந்த ஆர்ட்மெிஸ் திட்டங்கள் மூன்று பாகங்களாக செயல்படுத்தப்படுகின்றன. இதன் கடைசி பாகத்தில்தான் மனிதன் நிலவுக்கு அனுப்பப்படுகிறான். முதல் பாகம் (ஆர்டெமிஸ்-1) கடந்த திங்கட்கிழமை செயல்படுத்தப்பட இருந்த நிலையில் ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமா பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வரும் 3ம் தேதி பயணம் மீண்டும் தொடங்குகிறது.

திட்டம்
இத்திட்டத்தின்படி நீண்ட கால விண்வெளி பயணத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்துகொள்ளும் விதமாக தாவர விதைகள், பாசிகள், ஈஸ்டுகள், பூஞ்சை ஆகியவற்றை விண்வெளிக்கு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது. 6 வாரக்காலங்கள் நிலவை சுற்றிவிட்டு இந்த ஆளில்லா விண்கலன் மீண்டும் பூமிக்கு திரும்பும். அப்போது இந்த தாவர விதைகள், பாசிகள் உள்ளிட்டவைகள் ஆராயப்படும். இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு மனிதனின் விண்வெளிப்பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதுதான் நாசாவின் திட்டம்.

பயணம்
இத்திட்டத்தின்படி நேற்று மாலை 32 அடுக்கு உயரமான, இரண்டு-நிலை விண்வெளி ஏவுகணை அமைப்பு (SLS) ராக்கெட் மற்றும் அதன் ஓரியன் குழு காப்ஸ்யூல் புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து செப்.3ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை நாசாவுடன் சேர்ந்தது, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA), மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) ஆகியவை மேற்கொள்கின்றன.

இந்தியாவின் பங்கு
இந்த பயணத்தின் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திராயன்-1 உலகுக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பு நவம்பர் 14, 2008 அன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆகஸ்டில் சந்திரயான்-1ன் மூன் மினராலஜி மேப்பர் (எம்3) ஸ்பெக்ட்ரோமீட்டர் சந்திரனின் துருவப் பகுதியில் நீர் உறைபனியாக இருப்பதை கண்டுபிடித்தது. உலக நாடுகள் இதனை கண்டுபிடிக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா இதனை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நிலவுக்கு இந்தியாவ ரோவரை அனுப்ப உள்ளது.

புதிய பாய்ச்சல்
இந்த பயணங்கள் நிலவை நோக்கி கட்டமைக்கப்பட்டிருந்தாலும், நோக்கம் செவ்வாய் கிரகம்தான். இந்த 'ஆர்டெமிஸ்' திட்டம் மூலம் 'கேட்வே' என அழைக்கப்படும் ஒரு விண்வெளி நிலையம் கட்டமைக்கப்பட்டு நிலவை சுற்றி வரும். இங்கிருந்துதான் செய்வாய் கிரகத்திற்கு மனிதன் செல்ல இருக்கிறான். நிலவில் மனிதன் முதன்முதலில் இறங்கியது மனிதக்குல வரலாற்றில் எப்படி பெரும் புரட்சியை உருவாக்கியதோ, அதேபோல செவ்வாய் கிரகத்தில் மனிதன் தரையிறங்குவதும் மனித இன வளர்ச்சியில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications