நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா 5 வருடமாக யோசித்துக் கொண்டு இருந்த ஒரு விஷயத்தில் சீனா தேவையில்லாமல் நுழைந்து தற்போது வசமாக சிக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்தியா - சீனா - ஈரான் இடையே தற்போது உருவாகி இருக்கும் மோதலை அமெரிக்கா கவனிக்க தொடங்கி உள்ளது. லடாக் பிரச்சனையில் ஆசியாவில் கால் பதிக்க முடியாத விரக்தியில் இருந்த அமெரிக்கா தற்போது ஈரான் பிரச்சனை மூலம் ஆசியாவில் மூக்கை நுழைக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா - ஈரான் இடையே செய்யப்பட்டு இருந்த சாபஹர் திட்டம்தான் இதற்கு காரணம். இந்த திட்டத்தில் சீனா மூக்கை நுழைத்து இருப்பதுதான் அமெரிக்காவின் கோபத்திற்கு காரணம்.

தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது- அமெரிக்காவுக்கு சீனா பதிலடி தென்சீனா கடலில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை உள்ளது- அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

என்ன திட்டம்

என்ன திட்டம்

இந்த பிரச்சனை என்ன என்று பார்க்கும் முன், இந்த திட்டம் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஈரானில் இருக்கும் சாபஹர் துறைமுகம் அந்நாட்டின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாகும். ஈரானின் இந்த துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதுதான் சாபஹர் ரயில்வே திட்டம். ஆம் ஈரான் நாட்டில் இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்கப்பட இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த திட்டத்தை 2015ல் இந்தியா பேசி, 2016ல் ஒப்பந்தம் செய்தது.ஆப்கானிஸ்தான் உள்ளேயும் இந்த ரயில் பாதை செல்வதால் அந்த நாடு உடனும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களில் இந்த திட்டத்திற்காக இந்தியா துரும்பை கூட கிள்ளி போடவில்லை. ஒரு பணியும் செய்யவில்லை. இந்தியா இங்கு எந்த பணியும் செய்யாமல் போனதற்கு காரணம் அமெரிக்கா.

அமெரிக்கா காரணம்

அமெரிக்கா காரணம்

ஆம் அமெரிக்கா போட்ட சில கண்டிஷன்தான் இதற்கு காரணம். இந்தியா இந்த ஒப்பந்தத்தை செய்த சில நாட்களில்தான், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வரிசையாக பொருளாதார தடைகளை விதித்தது.அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்று கூறி ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்தது. ஈரானிடம் பெட்ரோல் டீசல் வாங்க கூடாது என்று இந்தியா மற்றும் சீனாவிற்கு அமெரிக்கா ஆர்டர் போட்டது .

மீறினால் நடவடிக்கை

மீறினால் நடவடிக்கை

அதையும் மீறி ஈரானுடன் உறவு வைத்துக் கொண்டால், உங்களுடன் உலக நாடுகள், நேட்டோ நாடுகள் அன்னம் தண்ணீர் புழங்காது என்று நாட்டாமை போல டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா கைவிட்டது . அதேபோல் சாபஹர் திட்டத்தை கையில் எடுத்தால் அது சிக்கலாக வாய்ப்புள்ளது, அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது என்று இந்தியா நினைத்தது.

எதுவும் செய்யவில்லை

எதுவும் செய்யவில்லை

இதனால் சாபஹர் திட்டத்தை இந்தியா நிறைவேற்றாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தில் இருந்து இந்தியாவை சீனா வெளியேற்றி உள்ளது. நாங்களே இதை செய்து கொள்கிறோம் என்று ஈரான் கூறியுள்ளது. சீனாவின் அழுத்தம் காரணமாக ஈரான் இப்படி அறிவித்துள்ளது. சீனாவுடன் ஈரான் 400 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை செய்து இருக்கும் நிலையில், தற்போது ஈரான் இந்தியாவிற்கு எதிராக முடிவு செய்துள்ளது.

இதுதான் பின்னணி

இதுதான் பின்னணி

தற்போது இந்தியா செய்யாமல் தவிர்த்து வந்த திட்டத்தின் மீது கவனம் செலுத்த , அதே துறைமுகம் மீது கவனம் செலுத்த சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி 25 வருட இரண்டு நாட்டு ஒப்பந்தத்தை ஈரான் - சீனா கையெழுத்திட்டுள்ளது. இதுதான் அமெரிக்காவை சீண்டி இருக்கிறது . சீனா இந்த திட்டம் மூலம் ஈரானில் பல்வேறு சாலை பணிகள், ரயில்வே பணிகள், மற்றும் துறைமுக பணிகளை செய்ய உள்ளது. சாபஹார் துறைமுக பணிகளையும் இந்த திட்டம் மூலம் சீனா செய்ய இருக்கிறது.

கோபம்

கோபம்

சீனா மீது ஏற்கனவே அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. சீனா எப்போது தப்பு செய்யும், மொத்தமாக சீனா மீது பொருளாதார தடை விதிக்கலாம் என்று அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது. தற்போது வகையாக சீனா அமெரிக்காவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருந்தது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவது உட்பட நெருங்கிய உறவுகள் எதை மேற்கொண்டாலும் அந்த நாடு மீது பொருளாதார தடை விதிப்போம் என்று கூறி இருந்தது.

சரியான வாய்ப்பு

சரியான வாய்ப்பு

தற்போது சீனாவை மொத்தமாக காலி செய்ய அமெரிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா விஷயத்திலும் , பொருளாதார போரிலும் சீனாவை அமெரிக்கா ஒடுக்க முடியவில்லை. தென் சீன கடல் எல்லை சண்டையில் இன்னும் முழுமையான முடிவு வரவில்லை. ஹாங்காங் பிரச்சனை இப்போதுதான் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ஈரான் மூலம் சீனாவை மிக எளிதாக தனிமைப்படுத்தலாம், காலி செய்யலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.

English summary
Chabahar port Train project: Why China took a wrong decision by joining with Iran against US?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X