இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர்
நியூயார்க்: உலக அரசியலில் இப்போது ஹாட் டாபிக் 'டி-டாலரைசேஷன்' (De-dollarization). அதாவது, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை ஒழிப்பது. இதற்காக பிரிக்ஸ் (BRICS) நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கரன்சியைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் ஒரு 'நோ' ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிவிட்டது.
இந்தியாவுக்கு கிடைத்த 'கோல்டன்' சான்ஸ்!
பிரிக்ஸ் கரன்சி மட்டும் செயல்பாட்டுக்கு வந்திருந்தால், ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் இந்தியாவின் கை ஓங்கியிருக்கும். டாலருக்கு மாற்றாக ஒரு வலுவான கரன்சியை உருவாக்குவதில் இந்தியா தலைமை தாங்கியிருக்கலாம். ஆனால், டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்கிற அதீத பயம், மோடியின் கால்களைப் பின்வாங்கச் செய்துவிட்டது. இந்தத் தயக்கமே இப்போது சீனாவுக்குச் சாதகமாக முடிந்துவிட்டது.

சீன யுவானின் விஸ்வரூபம்:
இந்தியா பின்வாங்கிய அந்த இடைவெளியை சீனா சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. "பிரிக்ஸ் கரன்சி வேண்டாம் என்றால் என்ன... சீன யுவானையே (Yuan) வர்த்தக கரன்சியாகப் பயன்படுத்துங்கள்" என மற்ற நாடுகளை வளைக்கத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் பிரிக்ஸ் அமைப்பையே சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிக்கிறது.
ஈரான் - சீனா - ரஷ்யா: புதிய அச்சு!
உலக அரசியலில் இப்போது ஈரான் - சீனா - ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டணி ஒரு நிஜமான சக்தியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து எறிந்துவிட்டு, டாலர் இல்லாத வர்த்தகத்தை இவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
ஹார்முஸ் ஜலசந்தி (Hormuz Strait): ஒருவேளை டாலர் வீழ்ச்சி அடையத் தொடங்கினால், அது இந்த ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்துதான் தொடங்கும்.
ஈரானின் உறுதி: இதற்கு முன் டாலரை எதிர்க்கத் துணிந்த பல நாட்டுத் தலைவர்கள் தங்கள் உயிரையே விலையாகக் கொடுத்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கி நின்று, ஈரான் இன்று வரை நிலைத்து நிற்பது ஒரு முக்கியத் திருப்பம்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் பெரும்பான்மையான கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த வழித்தடம் முடங்கி உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும். இது அமெரிக்க டாலரின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில், டாலருக்கு மாற்றாக சீன யுவான் (Yuan) மூலம் வர்த்தகம் செய்ய ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் முன்வரும்.
இதன் வழியாக பயணம் செய்யும் வாகனங்கள் டாலரை பயன்படுத்தினால் அனுமதிக்க முடியாது.. யுவானை பயன்படுத்தினால் அனுமதிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஏற்கனவே சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் சீனா தனது கரன்சியில் வர்த்தகம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டாலர் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை குறையும் போது, சீனா தனது யுவானை உலகளாவிய வர்த்தக கரன்சியாக நிலைநிறுத்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ளும். மேலும், அமெரிக்காவின் கடற்படை ஆதிக்கம் இந்த பகுதியில் சவாலுக்குள்ளாக்கப்படும்போது, அது ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் பிடியை மேலும் வலுப்படுத்தும்.
"வாய்ப்பு வரும்போது பயன்படுத்தாதவன், பின்னால் வருத்தப்பட நேரிடும்" என்பது அரசியல் பழமொழி. இந்தியா தனது பிராந்திய வல்லரசு கனவை டிரம்ப் மீதான பயத்தால் நழுவவிட்டுவிட்டதா? அல்லது இது ஒரு ராஜதந்திர நகர்வா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாளும் புதிய புவிசார் அரசியல் யதார்த்தத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இந்தியா எங்கே நிற்கப்போகிறது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் (அல்லது யுவான்?) கேள்வி!
-
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
துபாய் Oracle அலுவலகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications