இந்தியா இருக்கட்டும்.. பாகிஸ்தான் மீது எவ்வளவு வரி போட்டு இருக்கார் பாருங்க.. டிரம்பிற்கு வந்த கோபம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மட்டுமின்றி மற்ற பல நாடுகள் மீதும் வரிகளை விதித்து இருக்கிறார். முக்கியமாக பாகிஸ்தான் மீதும் கடுமையான வரிகளை விதித்து உள்ளார்.

இந்தியாவை விட அதிக வரிகளை பாகிஸ்தான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உள்ளார். இந்தியாவை விட 3 சதவிகிதம் அதிகமாக பாகிஸ்தான் மீது அவர் வரிகளை விதித்து உள்ளார். இந்தியா மீது 26% சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீது 29% வரிகளை விதித்து உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Do you know how much did Donald Trump announce Reciprocal Tariff on Pakistan

இந்தியாவின் இன்னொரு அண்டை நாடான இலங்கை மீதி இதை விட டபுள் மடங்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இலங்கை மீது 44% வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதோடு தைவான் மீது 32% வரிகளை விதித்து உள்ளார். இதில் தைவானை இதுவரை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரித்தது இல்லை. இப்போது இந்த வரி மூலம் மறைமுகமாக தனி நாடாக அங்கீகரித்து உள்ளது.

• சிலி 10%
• இந்தியா 26%
• இஸ்ரேல் 17%
• பிரேசில் 10%
• சீனா 34%
• ஜப்பான் 24%
• துருக்கி 10%
• தைவான் 32%
• வியட்நாம் 46%
• பாகிஸ்தான் 29%
• தாய்லாந்து 36%
• ஆஸ்திரேலியா 10%
• மலேசியா 24%
• கொலம்பியா 10%
• இலங்கை 44%
• சிங்கப்பூர் 10%
• இந்தோனேசியா 32%
• கம்போடியா 49%
• பிலிப்பைன்ஸ் 17%
• சுவிட்சர்லாந்து 31%
• பங்களாதேஷ் 37%
• தென் கொரியா 25%
• தென்னாப்பிரிக்கா 30%
• யுனைடெட் கிங்டம் 10%
• ஐரோப்பிய ஒன்றியம் 20%

பதிலடி வரிகள் என்றால் என்ன?

முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

Take a Poll

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+