நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உலக அழிவின் கடிகாரம்".. நகர்த்தப்பட்ட முள்! நேரம் கம்மியாதான் இருக்காம்! ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்

உலக அழிவை சுட்டிக்காட்டும் Doomsday கடிகாரத்தின் முள்ளை விஞ்ஞானிகள் நகர்த்தி உள்ளனர். உலக அழிவு நெருங்கிவிட்டதாக இதன் மூலம் அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக அழிவு நாளை ஆங்கிலத்தில் "டூம்ஸ் டே - Doomsday" என்று அழைப்பார்கள். இந்த டூம்ஸ் டே - Doomsday விற்கு என்று இருக்கும் கடிகாரம் ஒன்றின் நேரத்தை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மாற்றி உள்ளனர். இந்த கடிதத்தின் நேரத்தை ஆபத்தான புள்ளியை நோக்கி ஆராய்ச்சியாளர்கள் மாற்றி உள்ளனர்.

Doomsday Clock என்பது உலக அழிவிற்கான கடிகாரம். அணு ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பான Bulletin of the Atomic Scientists மூலம் உருவாக்கப்பட்டது. கடந்த 1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்காக சிக்காகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் இந்த கடிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கடிகாரத்தில் 4 புள்ளிகள் மட்டுமே இருக்கும். இதில் மேலே இருக்கும் புள்ளி நடு இரவை குறிக்கும்.

நடுஇரவு

நடுஇரவு

கீழே இருக்கும் புள்ளி காலை நேரத்தை குறிக்கும். இதில் கடிகார முழு நடு இரவை நெருங்க நெருங்க அது என்று அழிவை குறிக்கும். இரவு புள்ளிக்கு அருகில் முள் செல்ல செல்ல அது அழிவை குறிப்பதற்கான காரணம் ஆகும். இந்த முள் தானாக எல்லாம் நகரும் பயப்பட வேண்டாம். உலகில் நடக்கும் மோதல்கள், பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைப்பார்கள். உலகம் அழிவை நோக்கி செல்கிறது, முக்கியமாக அணு ஆயுத போர் நடக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதும் பட்சத்தில் இந்த முள்ளை இரவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வைப்பார்கள்.

இரவு

இரவு

இதற்கு முன்பே பல முறை முள்ளை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானிகள் இரவு நேரத்தை நோக்கி நகர்த்தி உள்ளனர். இந்த நிலையில்தான் முதல்முறையாக இந்த முள் இரவு நேரத்திற்கு மிக அருகில் வைக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் இருந்து வெறும் 90 நொடிகளுக்கு முன் முள் நகர்த்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இரவு நேரத்தில் இருந்து 100 வினாடிகளுக்கு முன் முள் இருந்தது. தற்போது 90 நொடிகளாக குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த டூம்ஸ் டே கடிகாரத்தில் முள் இரவு நேர நேரத்திற்கு மிக அருகில் சென்றுள்ளது. இது உலக அழிவை குறிப்பது ஆகும்.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

இதன் அர்த்தம் நாம் அழிவை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதாகும். சர்வதேச அளவில் இருக்கும் அணு ஆயுத மோதல் அபாயம், போர்கள், காலநிலை மாற்றம், வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த முற்களை நகர்த்துவார்கள். தற்போது ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் அணு ஆயுத போர் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்ற அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் பதிலுக்கு அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அபாயம் உள்ளது.

சீனா

சீனா

இந்தியா சீனா பிரச்சனை, சீனா - அமெரிக்கா பிரச்சனை, தென் சீன கடல் எல்லை பிரச்சனை போன்றவையும் கூட அணு ஆயுத போர் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய அபாயமாக பார்க்கப்படுகிறது. ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

காலநிலை

காலநிலை

அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இந்த பிரச்சனைகள் காரணமாகவே Doomsday கடிகாரத்தின் முள்ளை மாற்றி வைத்து உள்ளனர். இந்த பிரச்சனைகள் காரணமாக உலகம் அழிவிற்கு மிக அருகிலும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன் Doomsday கடிகாரத்தின் முழு இரவிற்கு இவ்வளவு அருகில் இருந்தது இல்லை. இந்த Doomsday கடிகாரத்தை கிளைமேட் ஆராய்ச்சியாளர்கள், 13 நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து நடத்தும் குழுவாகும்.

English summary
Doomsday clock time changed after three year: Pointers now closer to the night never before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X