திக்.. திக் நொடிகள்.. 18 அடி மலைப்பாம்பு கருணைக்கொலை.. வயிற்றுக்குள் கிழித்து பார்த்தால்.. ஓ காட்
நியூயார்க்: ஒரு மலைப்பாம்பின் வயிற்றில் 5 அடி நீள முதலை இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..
லிவிங் டுகெதர் பயங்கரம்! காதலியை 35 துண்டுகளாக வெட்டி.. நாய்களுக்கு வீசி வந்த இளைஞர் - அலறும் டெல்லி

ராஜநாகம்
இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. அந்த வகையில் இப்போதும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.. இந்த பாம்புகளை முழுமையாக அகற்ற, கடந்த ஆகஸ்ட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது..

18 அடி பர்மிஸ்
இருந்தாலும், இன்னமும் மலைப்பாம்புகள் அதிக அளவில் அந்த பகுதியில் அந்த சுற்றி கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், இங்கு நிலவும் மிதமான வெப்ப மண்டல சூழல்தான், விரைவான இனப்பெருக்கத்தை உண்டாக்கிவிடுவதுதான் என்கிறார்கள்.. இந்நிலையில் ரோசி மூர் என்ற விஞ்ஞானி, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில், 18 அடி பர்மிஸ் மலைப்பாம்பு ஒன்று, 5 அடி நீளமுள்ள முதலையை விழுங்கி விட்டது.. அந்த முதலையை காப்பாற்றுவதற்காக மலைப்பாம்பு, கருணைக் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்..

கருணைக்கொலை
கருணைக்கொலை செய்யப்பட்ட இந்த மலைப்பாம்பை நெக்ரோஷ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து ஆராய்ச்சி செய்யப்பட இருப்பதாகவும் ரோசி மூர் மேலும் தெரிவித்துள்ளார். எவர்க்லேட்ஸ் தேசிய பூங்கா தொழிலாளர்களால் 18 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு அந்த இடத்திலேயே கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.. அந்த வீடியோவில், விஞ்ஞானிகள் கிளவுஸ் அணிந்து மலைப்பாம்பின் வயிற்றில் உள்ள வீக்கத்தை தரையில் வெட்டுவதற்கு முன்பு கணக்கிடுகிறார்கள்.. அதற்கு பிறகு, விஞ்ஞானிகள் பாம்பின் வயிற்றில் இருந்து முதலையை எடுக்கிறார்கள்..

வெளிப்புற தோல்
அந்த முதலை பாம்பின் வயிற்றில் அப்படியே முழுமையாக இருந்தது... வெளிப்புற தோல் அடுக்கில் மட்டும் சிறிது சிதைந்து காணப்பட்டதே தவிர, முழு முதலை சிதைவில்லாமல் இருந்தது என்கிறார்கள். முதலையும், மலைப்பாம்பும் குணாதிசயங்கள் வேறு வேறாக இருந்தாலும், அவை ஒன்றையொன்று வேட்டையாடிக் கொள்ளும்.. பெரும்பாலும் முதலை, மலைப்பாம்பை வேட்டையாடுவது இயல்பாக நடக்கும்.. அந்த வேட்டையில், பாம்பையே முதலை விழுங்கிவிடக்கூடியவை.. பாம்பு முதலையை வேட்டையாடுவது என்பது எப்போதாவது நடக்ககூடிய சம்பவம், அதுதான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.