அமெரிக்காவிற்கு இந்தியா தரும் மாஸ் பதிலடி! 10 நாடுகளுக்கு போன போன்! பெரிய டீம் ரெடி.. டிரம்ப் ஷாக்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியா தற்போது பத்து நாடுகளுடன் தடையில்லா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆஸ்திரேலியா, கத்தார், ஓமன், பெரு, இலங்கை, நியூசிலாந்து போன்ற நாடுகள் அடங்கும். இவற்றுடன் இணைந்து வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது.

Donald Trump India

மேலும், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய EFTA கூட்டமைப்புடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிலி மற்றும் அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளைக் கொண்ட மெர்கோசூர் கூட்டமைப்புடனும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் உலகின் 10 முக்கிய வர்த்தக நாடுகளை இந்தியா தங்கள் பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவை தனிமைப்படுத்த நினைக்கும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் இந்த பிளான் மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.

ரஷ்யாவுடனான எரிசக்தி உறவு

ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க உலக நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அதாவது ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிய மாட்டோம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு மலிவான எரிசக்தியை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மையான நோக்கம் என்று டெல்லி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இந்தியா ரஷ்யா உறவு

உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் இச்சூழலில், ரஷ்ய எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% மேல் இறக்குமதி செய்யும் ஒரு நாட்டிற்கு, இந்த சலுகை விலைகள் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

உக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் மாஸ்கோ மீதான தடைகளைக் காரணம் காட்டி, ரஷ்ய எண்ணெய் மீதான சார்புநிலையைக் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியாவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு அரசியல் சார்ந்ததல்ல என்றும், அது தேசிய நலன்களையும் எரிசக்தி பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.

இந்தியா அமெரிக்கா மோதல்

ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.

இந்தியா ரஷ்யா எண்ணெய்

ஐரோப்பா தொடர்ந்து ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்து வருவதால், இந்தியா தனது சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனியாகப் பிரித்துப் பார்க்கப்படக்கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னதாக கூறி இருந்தார். இப்போது ஐரோப்பா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. ஆனால் இதற்காக இந்தியா எண்ணெய் வாங்குவதை தடுக்க கூடாது என்று இந்தியா கூறி உள்ளது. கொள்முதலை எளிதாக்க, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் அமெரிக்க டாலர் அல்லாத கட்டண முறைகளை பின்பற்றுகின்றன.

இந்தியா ரஷ்யா நெருக்கம்

இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் அதே அமெரிக்கா ரஷ்யாவிடம் யுரேனியம் வாங்குகிறது. அதை மட்டும் நிறுத்தவில்லை. அதை அவர்கள் முதலில் நிறுத்தட்டும். நாங்கள் நிறுத்துகிறோம் என்று இந்தியா நினைக்கிறதாம். இந்தியாவின் இந்த நிலைப்பாடு உலக அரசியலில் அதன் தனிப்பட்ட வலிமையை, பவரை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு நாடுகளுடனும் ரஷ்யாவுடனும் உறவுகளைச் சமநிலைப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது சொந்த முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் ஒரு சுதந்திரமான சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

தற்போதைக்கு, ரஷ்ய எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது எரிபொருள் விலைகளை நிலைப்படுத்த உதவுகிறது. அமெரிக்காவின் ராஜதந்திர அழுத்தங்கள் இருந்தபோதிலும், எரிசக்தி பாதுகாப்பிற்கே முன்னுரிமை என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+