வேலைதானே போச்சு.. நம்பிக்கையில்லையே! ட்விட்டரிலிருந்து டிஸ்மிஸ்சான இந்திய இளைஞரின் சூப்பர் போஸ்ட்!
நியூயார்க்: தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு கைமாறியதை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், தனது வேலை பறிபோனதை கூட மிகவும் கூலாகவும், ஜாலியாகவும் பதிவிட்டிருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சாதாரண தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், இத்தனை பாசிட்டிவான எண்ணத்தை கொண்டிருக்கும் அந்த இளைஞர் உலகம் முழுவதுமே கவனம் ஈர்த்து பிரபலமாகி இருக்கிறார்.
நேர்மறையான எண்ணம் ஒரு மனிதருக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த இளைஞர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

எலான் மஸ்க் கையில் ட்விட்டர்..
மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பே கையெழுத்தானது. அப்போது முதலாகவே, ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என பரவலாக பேச்சு எழுந்தது. இதனை எலான் மஸ்க்கும் ஒப்புக்கொண்டார். நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக சில கடும் நடவடிக்கைகள் இருக்கும் என அவர் முன்பே வெளிப்படையாக தெரிவித்தார்.

அதிரடி பணிநீக்கம்
அன்று முதலே, உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் ஊழியர்கள் கலக்கத்தில் இருந்தனர். பலர் எதிர்வரும் சூழலை புரிந்துகொண்டு வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். இந்நிலையில், எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் முழுவதுமாக வந்ததை அடுத்து, கடந்த சில தினங்களாகவே அங்குள்ள ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். ஒரே ஒரு மெயிலில் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி தெரிவித்த முதல் இந்தியர்..
7,500-க்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இவ்வாறு வேலை இழந்தவர்கள், தனது விதியை நொந்துக் கொண்டும், எலான் மஸ்க்கை திட்டித் தீர்த்துமே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் ஊழியர் ஒருவர்தான், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

கூல் போஸ்ட்..
ட்விட்டர் நிறுவனத்தில் 'பப்ளிக் பாலிசி' பிரிவில் பணிபுரிந்து வரும் யஷ் அகர்வால் என்பவரே, தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை கூலாக பதிவிட்டுள்ளார். அதில் அவர், "சற்று முன்புதான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். இந்த நிறுவனத்தில், என்னுடைய டீமில் பணிபுரிந்தது மிகப்பெரிய கெளரவம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ட்விட்டர் அலுவலகத்தில் வைத்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். முகத்தில் ஒரு துளி கவலை கூட இல்லாமல், முகம் முழுவதும் மகிழ்ச்சி தாண்டவமாட அதில் யஷ் அகர்வால் தெரிகிறார்.

குவியும் வாழ்த்து..
யஷ் அகர்வாலின் இந்த பதிவு, லட்சக்கணக்கான லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் அள்ளி வருகிறது. பள்ளித் தேர்வில் தோல்வி அடைந்தால் கூட மனமுடைந்து போகும் இன்றைய மாணவர்கள், யஷ் அகர்வாலை ஒரு ரோல் மாடாக எடுத்துக்கொள்ள வேண்டும் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். தனது வேலை பறிபோனதை கூட மகிழ்ச்சியாக தெரிவிக்கும் மனநிலை கொண்ட யஷ், எதிர்காலத்தில் பெரிய வெற்றியை பெறுவார் என அனைவரும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications