காபூல் ஏர்போர்ட் மீது தாக்குதல்- 'உருமாறிய' ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாதிகள் சதி- அமெரிக்கா ஷாக் தகவல்
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்-கே எனும் பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை மாற்று வழியில் மீட்க அந்நாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசமாகி ஒரு வாரமாகிவிட்டது. தாலிபான்களின் கொடுங்கோலாட்சியின் பிடியில் சிக்காமல் அந்நாட்டை தப்பி வெளியேறும் முயற்சியாக காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
காபூல் விமான நிலையத்தின் ஒருபகுதியை அமெரிக்கா படைகள் வசப்படுத்தி உள்ளன. அந்த பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் தரை இறக்க அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் படிப்படியாக இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானியர்களின் துயரம்
அப்படி தரை இறங்கும் வெளிநாட்டு விமானங்களில் ஏறி தப்பிச் செல்ல ஆப்கானிஸ்தான் மக்கள் உயிரை பணயம் வைத்து பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். விமானங்களின் சக்கரங்களின் தொங்கியபடியும் விமான சக்கரங்களில் தங்களை கட்டியபடியும் பயணித்து நடுவானில் இருந்து கீழே விழுந்து மரணித்த சம்பவங்களும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் காபூல் விமான நிலைய நெரிசலில் சிக்கி உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. காபூல் விமான நிலையம் நோக்கி செல்கிறவர்களை தாலிபான்கள் தடுத்து நிறுத்து விசாரணைக்குப் பின் விடுவிப்பதும் பலரை திருப்பி அனுப்புகிற சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் சதி?
இந்த நிலையில்தான் அமெரிக்கா தரப்பில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டவரை வெளியேற்றும் முயற்சிகளை தடுக்கும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே. சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. காபூல் விமான நிலையம் மீது கார் வெடிகுண்டுகள் மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காபூல் விமான நிலையத்தில் குவிந்திருக்கும் மக்களுடன் கலந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளதாம். அதேபோல் காபூல் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்கிறது அமெரிக்கா.

மாற்று வழிதேடும் அமெரிக்கா
இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டவரை பாதுகாப்பாக காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான்ன மாற்று வழிகள் குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கை ஓங்கியதில் இருந்து அதாவது ஜூலை மாதம் இறுதியில் இருந்து இதுவரை 22,000 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் ஒருவார காலத்தில் மட்டுமே 17,000 அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சி-17 ரக விமானப் படை விமானம்தான் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா படைகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக உதவிய ஆப்கானிஸ்தனையர்களும் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-கே என்பது என்ன?
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே என்கிற அமைப்பு குறித்த விவாதமும் எழுந்துள்ளது. சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்த கொடூரமான அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். இதன் உருமாறிய அதாவது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா வகை வைரஸாக திரிபு அடைந்தது போல ஐ.எஸ்.ஐ.எஸ்- கே என்பதும் உருமாறிய பயங்கரவாத அமைப்பாக இருக்கிறது. அதாவது ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்பது Islamic State of Iraq and the Levant - Khorasan Province என்பதை குறிக்கிறது. ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் இந்த உருமாறிய பயங்கரவாத அமைப்பில் ஆப்கானிஸ்தானியர்கள், பாகிஸ்தானியர்கள், தஜிகிஸ்தானியர்கள் தீவிரவாதிகளாக இருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த சிலரும் இந்த அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஐ.எஸ்.ஐ.எஸ்-கே தலைவர்கள்?
ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பின் தலைவராக தெஹ்ரிக்-இ- தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் கான் செயல்பட்டு வந்தார். இதன் துணைத் தலைவராக ஆப்கானிஸ்தானில தாலிபான்களின் முன்னாள் கமாண்டரான அப்துல் ரவூப் அலிஜா இருந்து வந்தார். 2015-ம் ஆண்டு அமெரிக்கா படைகளின் தாக்குதல்களில் அலிஜா கொல்லப்பட்டார். 2016-ல் ஹபீஸ் சையத் கானும் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். தற்போது இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் அப்துல்லா ஓரோக்ஜாய் அல்லது அஸ்லாம் பாரூக்கி என்பவராவார். இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது, அதன் பின்னணி குறித்து சர்வதேச நாடுகளிடையே முரண்பட்ட கருத்துகள் உள்ளன. ரஷ்யாவைப் பொறுத்தவரையில் இது அமெரிக்காவின் ஆதரவால் உருவானது என்கிறது. ஆனால் அமெரிக்காவோ தங்களுக்கு எதிரான நாடுகளால் உருவாக்கப்பட்டது என்கிறது. சர்வதேச நாடுகளின் ஆடுகளமாக ஆப்கானிஸ்தான் சிதைந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே யதார்த்தம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications