வான்டடா வந்து வாங்கி கட்டிக்கொண்ட எலான் மஸ்க்.. நாசா கொடுத்த நச் ரிப்ளை! திணறும் டிரம்ப்
நியூயார்க்: அரசு ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்று எலான் மஸ்க் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவருக்கு பதிலளிக்க வேண்டாம், ரிப்போர்ட் எதுவும் அனுப்பாதீங்க என்று நாசா தனது ஊழியர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.
நாசா மட்டுமல்ல மற்ற அரசு துறைகளும் எலான் மஸ்க்கின் உத்தரவை கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றன. இதனால், எலான் மஸ்க் டென்ஷனாகியிருக்கிறார். என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? வாங்க பார்க்கலாம்.

நாசா சொன்னது இதுதான்:
நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம், க்ளென் ஆராய்ச்சி மையம் மற்றும் ஏம்ஸ் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல ஆய்வு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேனேஜர்கள் இது குறித்து வழிகாட்டியுள்ளனர். அதாவது, மஸ்க் தரப்பிலிருந்து அனுப்பப்படும் மெயிலுக்கு நீங்கள் ரீப்ளை செய்ய வேண்டாம். அதைபற்றி கண்டுக்காம வேலையை பாருங்க என்று கூறியுள்ளதாக ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
எலான் மஸ்க் அனுப்பிய மெயில் என்ன?
அமெரிக்க அரசு துறைகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை மிச்சமாக்க முடியும் என டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார். எனவே, இந்த வேலையை செய்வதற்கு எலான் மஸ்க் தலைமையில் Department of Government Efficiency (DOGE) எனும் துறையை உருவாக்கியுள்ளார். சூப்பர், அரசு துறைகளை ஒழிக்க, புதுசா ஒரு துறையா? என அமெரிக்கர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.
கடுப்பில் ஊழியர்கள்
இந்த DOGE துறையிலிருந்து அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் ஒரு மெயில் சென்றிருக்கிறது. அதில், ஊழியர்கள் இனி வாரம் வாரம் தாங்கள் செய்த வேலையை ரிப்போர்ட்டாக கொடுக்க வேண்டும். தவறினால் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே போதுமான ஆட்கள் இல்லாததால் 10 பேர் செய்யும் வேலையை 4-5 பேர் செய்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, ரிப்போர்ட் அனுப்பு, அதை அனுப்பு, இதை அனுப்பு என்று சொன்னால் எப்படி இருக்கும்? அரசு ஊழியர்கள் மஸ்க் மேல் செம கடுப்பில் இருக்கிறார்கள்.
எனவேதான் மஸ்க்கின் மெயிலை கண்டுக்காதீங்க என எஃப்பிஐ (FBI), வெளியுறவுத்துறை, பெண்டகன் என பல முக்கிய துறைகளின் மேனேஜர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த துறைகளை தொடர்ந்து தற்போது நாசாவும், இதையே தனது ஊழியர்களுக்கு கூறியுள்ளது.
களமிறங்கும் தொழிற்சங்கங்கள்
மஸ்க்கின் இந்த சர்ச்சையான உத்தரவுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சரமாரியாக கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசாங்க ஊழியர்களை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது மோசமான சிந்தனை என்று அமெரிக்க ஊழியர்கள் கூட்டமைப்பு (AFGE) விமர்சித்திருக்கிறது. வேலியில போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக, மஸ்க் தற்போது முழித்து வருகிறார். மஸ்க்கை வைத்து வேலையை முடிக்க முடியவில்லையே என்று டிரம்ப்பும் கொஞ்சம் ஜர்க்காகியுள்ளர்.
மஸ்க்கின் உத்தரவு குறித்து உங்களது கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் வாசகர்களே!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications