கண்கள் சிவந்த சவுதி சல்மான்! கோபப்பட்ட கத்தார்! மிடில் ஈஸ்ட் போராக உருவெடுத்த ஈரான் - இஸ்ரேல் மோதல்
டெல்லி: ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுத்து உள்ளது. நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
6 ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரான் கத்தாரில் தாக்குதல் நடத்தியது. ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அல் உடீத் விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் தளத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் situation அறையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் நிலைமையை கண்காணித்து வருகிறார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து கத்தாரில் உள்ள தளங்கள் மீது 6 ஏவுகணைகளை ஏவியது என்று ஏ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 23, 2025 அன்று, ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது சற்று முன் ஏவுகணைகளை ஏவியது. ஆபரேஷன் பெஷாரத் ஃபதா என்று பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் தளத்தின் மீதான தாக்குதல்தான் இதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தோஹாவுக்கு வெளியே அமைந்துள்ள அல் உடீத் விமானத் தளத்தில் அமெரிக்கா சுமார் 10,000 துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ நிறுவலாகும், மேலும் இப்பிராந்தியத்தில் முக்கிய மையமாக விளங்குகிறது. இங்குதான் ஈரான் தாக்கி உள்ளது.
கத்தார் சவுதி அரேபியா கண்டனம்
இந்த தாக்குதலுக்கு கத்தார் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவையும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனால் கிட்டத்தட்ட இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதாவது சன்னி - ஷியா மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள்
அமெரிக்கா
கத்தார்
சவுதி அரேபியா
பஹ்ரைன்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
இஸ்ரேல்
எகிப்து (பெரும்பாலும் இணக்கமாக இருக்கும்)
மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் நட்பு நாடுகள்
அசாத் தலைமையிலான சிரியா
ஈரான் ஆதரவு ஈராக்கிய ஆயுதக் குழுக்கள்
லெபனானில் ஹிஸ்புல்லா
ஏமனில் ஹவுதிகள்
அமெரிக்க எதிர்ப்பு போராளிக் குழுக்கள்
இதில் கத்தார்
சவுதி அரேபியா
பஹ்ரைன்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஏற்கனவே நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் மத்திய கிழக்கில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications